கூடலுார்:நெல் அறுவடைக்கு தொழிலாளர்கள் கிடைக்காததால், இயந்திரத்தால் நெல் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.
நடப்பு ஆண்டு ஜூலை மாதம் நெல் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. தேவையான அளவு மழை பெய்ததால், எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்துள்ளது. நெல் அறுவடைக்கு தயாரான நிலையில், தொழிலாளர்கள் கிடைக்கவில்லை. இதனால், இயந்திரம் பயன்படுத்தி நெல் அறுவடை செய்து வருகின்றனர்.இயந்திரங்களுக்கும் பற்றாக்குறை உள்ளதால், சமவெளி பகுதியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறுகையில்,'ஆட்கள் கிடைக்காததால் இயந்திரத்தால் நெல் அறுவடை பணிகளை மேற்கொண்டுள்ளோம். இயந்திரம் கிடைப்பதிலும், வாடகை செலுத்துவதிலும் சிரமம் உள்ளது. வரும் காலங்களில், வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த வாடகையில், அறுவடை இயந்திரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE