விளையாட்டாக துவங்கும் போதை பழக்கங்கள் நாளடைவில் உயிருக்கே உலை வைக்கும் அளவிற்கு போய்விடுகிறது. தற்போது இப்பழக்கம் திண்டுக்கல்லில் இளம் வயதினரிடையே குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.
பொதுவாக போதை வஸ்துகளை இரண்டாக பிரிக்கின்றனர். ஒன்று, சட்டத்திற்கு உட்பட்டு கடைகளில் விற்கப்படும் சில ரசாயன கலவைகளில் சேர்க்கப்பட்ட பொருட்கள். இதில் மருந்து மாத்திரைகள், பெயின்ட் தின்னர், வார்னிஷ், ஒயிட்னர் மற்றும் பெவிகால் போன்றவை அடங்கும். இரண்டாவது, சட்டத்திற்கு புறம்பான பொருட்கள். இதில் கஞ்சா, அபின், ெஹராயின் போன்றவை உள்ளன.பெரும்பாலும் சிறுவர்களிடம் பணம் புழங்காததால், தின்னர், ஒயிட்னர் போன்றவற்றை நாடிச் செல்கின்றனர். பணம் புழங்கும் 25 வயதிற்குட்பட்டோர் கஞ்சா போன்றவற்றை நாடுகின்றனர்.
இளஞ்சிறார்கள் சிலர் பணத்திற்காக வேலைக்குச் செல்கிற அவலமும் உள்ளது.கொரோனா காலம் என்பதால் பள்ளி, கல்லுாரிகள் மூடிக்கிடக்கின்றன. இதனால், பொழுது போக்காக ஒன்று கூடும் சிறார்கள், இதுபோன்ற போதைக்கு அடிமையாகின்றனர். இதனை சில சமூகவிரோதிகள் பயன்படுத்தி, குற்ற சம்பவங்களில் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பல கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, திருட்டு, போன்ற செயல்களில் ஈடுபடுவோரில் 80 சதவீதத்தினர் சிறார்கள் மற்றும் இளைஞர்களே. பெற்றோர் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் பாதுகாப்புத் துறையினரும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE