லாரி மோதி மாணவி பலிமதுரை: சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் புதுார் ராஜேந்திரன். கம்பி பின்னும் தொழிலாளி. இவரது மகள் பூவிகாஸ்ரீ 8. அவ்வூரில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சித்தப்பா ராஜராஜ சோழனுடன் டூவீலரில் திருவேடகத்தில் உள்ள அம்மாச்சி வீட்டிற்கு புறப்பட்டார். காலை 11:30 மணிக்கு கோரிப்பாளையம் ஏ.வி. பாலத்திற்கு பனகல் ரோட்டில் இருந்து திரும்பும்போது பின்தொடர்ந்து வந்த சிலிண்டர் லாரி மோதியது. ராஜராஜசோழன் ரெஹல்மெட் அணிந்திருந்தார். நிலைத்தடுமாறி விழுந்த பூவிகாஸ்ரீ தலையில் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். தல்லாகுளம் போக்குவரத்து குற்றப்புலனாய்வு எஸ்.ஐ., கண்ணன் விசாரிக்கிறார்.*
குண்டர் சட்டத்தில் கைதுமதுரை: திருச்சி தாராநல்லுார் முனீஸ்வரன் 24. மதுரை நகரில் கஞ்சா விற்ற வழக்கு உள்ளது. இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.*
பேஸ்புக்கில் அறிமுகமாகி மோசடிமதுரை: கோவை கவுண்டம்பாளையம் காசிநாதன் 27. இவருக்கு பேஸ்புக் அறிமுகமான ஆனையூர் ஸ்ரீபுகழேந்திர, வி.ஏ.ஓ., வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் பெற்று மோசடி செய்தார். கூடல்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி தற்கொலைமதுரை: பொன்மேனி காளிமுத்து நகர் சங்கீதா 17. நேற்று மதியம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து எஸ்.எஸ். காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.*
அலைபேசி பறிப்புதிருமங்கலம்: சோழவந்தான் ரோட்டைச் சேர்ந்தவர் வேல்முருகன் 34. நேற்று முன்தினம் டைப்பிங் கிளாஸ்க்கு சென்றுவிட்டு அலைபேசியில் பேசியபடி சைக்கிளில் சென்றார். அப்போது டூவீலரில் வந்த 2 பேர் பறித்து சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.மாடு திருடிய சிறுவன் உட்பட மூவர் கைதுவாடிப்பட்டி: எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ.,க்கள் ஆனந்தகுமார், வெங்கடேஷ், போலீசார் விஜி, மகேந்திரன், சரவணன் ஆகியோர் சமயநல்லுார், சோழவந்தான்பகுதிகளில் மாடு திருட்டு குறித்து விசாரித்து வந்தனர். ஊர்மெச்சிகுளம் மூர்த்தி மகன் லோகேஸ்வரன் 20, அதே பகுதி 17 வயது சிறுவன், கட்டப்புளி நகர் வேன் டிரைவர் அழகர்சாமியை31, கைது செய்தனர். அவர்கள் திருடி விற்ற5பசுமாடு, 2 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மினி வேனை பறிமுதல் செய்தனர்.*
சிறுமி கர்ப்பம் : கொத்தனார் கைதுவாடிப்பட்டி: தென்பழஞ்சி கொத்தனார் தங்கபாண்டி 27. திருமணமானவர். இவர்17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக கூறிநெருங்கி பழகினார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள சிறுமியை திருமணம் செய்ய மறுத்ததாக கைது செய்யப்பட்டார்.* வாலிபர் தற்கொலைவாடிப்பட்டி: நரிமேடு பாண்டி மகன் அருன்பாண்டி 24. ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு ரூ.7 லட்சம் வரை கடன் வைத்துள்ளார். நேற்று வாடிப்பட்டியில் நண்பர்காளிதாஸ் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.* தொழிலாளி பலிஅலங்காநல்லுார்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆச்சிபுரம் கோவிந்தராஜ் 38. கம்பி வேலி அமைக்கும் தொழிலாளி. மதுரை கொண்டயம்பட்டி அருகே வேலை முடித்துவிட்டு வைகை பெரியாறு கால்வாயில் குளித்தபோது இழுத்து செல்லப்பட்டார். தீயணைப்பு அலுவலர் முத்துராம் தலைமையிலான வீரர்கள் உடலை மீட்டனர்.* குழந்தை இறப்புமேலுார்: சந்தைப்பேட்டை ஜெயலட்சுமணன் 35. இவரது 9 மாத குழந்தை கிருஷ்ணமூர்த்தி, கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE