கட்டுமான கண்காட்சி இன்று நிறைவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான கண்காட்சி இன்று நிறைவு

Added : டிச 20, 2020
Share
மதுரை : மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் டிச., 18ல்துவங்கிய கோவை பிஸினஸ் டிரேடு பேர் நிறுவன கட்டுமான, இன்டீரியர், எக்ஸ்டீரியர் பொருட்கள் கண்காட்சி இன்றுடன் (டிச., 20) நிறைவு பெறுகிறது. இக்கண்காட்சியில் அலங்கார, அலுவலக, கார்ப்பரேட் நிறுவன, வணிக வளாக, தொழிற்சாலை, கட்டுமானங்களுக்குதேவையான பொருட்கள் நிரம்பி உள்ளன. அலங்கார முகப்புகள், கண்ணாடிகள், தானியங்கி கதவுகள், மின் ஒயர்கள்,

மதுரை : மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் டிச., 18ல்துவங்கிய கோவை பிஸினஸ் டிரேடு பேர் நிறுவன கட்டுமான, இன்டீரியர், எக்ஸ்டீரியர் பொருட்கள் கண்காட்சி இன்றுடன் (டிச., 20) நிறைவு பெறுகிறது.

இக்கண்காட்சியில் அலங்கார, அலுவலக, கார்ப்பரேட் நிறுவன, வணிக வளாக, தொழிற்சாலை, கட்டுமானங்களுக்குதேவையான பொருட்கள் நிரம்பி உள்ளன. அலங்கார முகப்புகள், கண்ணாடிகள், தானியங்கி கதவுகள், மின் ஒயர்கள், விளக்குகள், சுவிட்ச் பாக்ஸ், டைல்ஸ், மார்பிள்ஸ், கிரானைட், பிளைவுட், லேமினேஷன் மரச்சாமான்கள், கதவு, ஜன்னல்கள், பைப் பிட்டிங்ஸ் என பலவித பொருட்களை வாங்கலாம்.கிளாஸ் டெக், பெட் அண்ட் பாத் ஷோ, டோர் அண்ட் விண்டோஸ், பிராப்பர்ட்டி அண்ட் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட கட்டுமான துறை சார்ந்த பல்வேறு தனி ஸ்டால்களும் இடம் பெற்றுள்ளன.

குறிப்பிட்ட கட்டுமான பொருட்களின்விலையில் 70 சதவீதம் தள்ளுபடி உண்டு. கண்காட்சியை காலை 10:00 மணி - இரவு 8:30 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X