மதுரை : மதுரையில் மகப்பேறு டாக்டர்கள் சங்கத்தின் 27வது ஆண்டு கருத்தரங்கு நடந்தது.தலைவர் சுமதி தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமி முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் செந்தில், இந்திய மருத்துவ கழக மதுரை கிளை தலைவர் அழக வெங்கடேசன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை துவக்கினர். முன்னதாக கொரோனா பணியில் சிறப்பாக பங்களித்த அரசு மருத்துவமனை டாக்டர்கள் நடராஜன், பிரபாகரன் மற்றும் கொரோனா கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளித்த மகப்பேறு டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து 'அதிக ஆபத்தான கர்ப்பம்' என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கு நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து நாடுகளை சேர்ந்த 15 மருத்துவ நிபுணர்கள் பேசினர். 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர். பொருளாளர் பத்மா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE