இது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!| Dinamalar

இது உங்கள் இடம் : ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது!

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (92) | |
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :மீனாட்சி மைந்தன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இரண்டு வாரங்களுக்கு மேலாக, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்ட பிரச்னைக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரிய ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, 'விவசாயிகளை அழைத்து, பேச்சு நடத்த வேண்டும்' என, கூறியுள்ளார். ஸ்டாலின், இவ்வளவு நாட்களாக

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

மீனாட்சி மைந்தன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: இரண்டு வாரங்களுக்கு மேலாக, டில்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்ட பிரச்னைக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அரிய ஆலோசனை வழங்கியுள்ளார். அதாவது, 'விவசாயிகளை அழைத்து, பேச்சு நடத்த வேண்டும்' என, கூறியுள்ளார். ஸ்டாலின், இவ்வளவு நாட்களாக எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. விவசாயிகளின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், புதிய சட்டங்களை, மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக, விவசாயிகள் போராடி வருகின்றனர்.



latest tamil news




'எந்த பிரச்னை என்றாலும், பேசி களைவோம். இதில் அரசுக்கு, 'ஈகோ' பிரச்னை எதுவுமில்லை' என, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அறிவித்து, பல சுற்று பேச்சு நடந்து வருகிறது. ஸ்டாலினுக்கு, விவசாயிகள் மீது எவ்வளவு அக்கறை?


latest tamil news




இவர் தந்தை கருணாநிதி, முதல்வர் பதவியில் இருந்த போது, மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, கோவையில் கண்டன பேரணி நடத்தியோர் மீது, துப்பாக்கி சூடு நடத்தி, 12 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த கொடூரசம்பவத்தை, கோவை மாவட்டம் மட்டுமல்ல எந்த விவசாயியும் மறக்க மாட்டார்கள்.ஸ்டாலின் பாவம், அப்போது, அவர் பள்ளி மாணவர்; அவருக்கு ஒன்றும் தெரியாது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X