பொது செய்தி

இந்தியா

எகிறிக்கொண்டே போகும் எலான் மஸ்க் சொத்து மதிப்பு

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : உலகின் இரண்டாவது பணக்காரரான, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, கடந்த வெள்ளியன்று மட்டும் கிட்டத்தட்ட, 66 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரியாக உள்ளார், எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் வரிசையில்,'பேஸ்புக்' நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க், முதல் இடத்திலும் எலான்

புதுடில்லி : உலகின் இரண்டாவது பணக்காரரான, எலான் மஸ்கின் சொத்து மதிப்பு, கடந்த வெள்ளியன்று மட்டும் கிட்டத்தட்ட, 66 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.



latest tamil news




மின்சார கார் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும், 'டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை செயல்
அதிகாரியாக உள்ளார், எலான் மஸ்க். உலக பணக்காரர்கள் வரிசையில்,'பேஸ்புக்' நிறுவனர், மார்க் ஜுக்கர்பெர்க், முதல் இடத்திலும் எலான் மஸ்க் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக,
'புளூம்பெர்க் மில்லியனர்ஸ் இண்டெக்ஸ்' மதிப்பிட்டுள்ளது. மார்க்கின் சொத்து மதிப்பு, 13.86 லட்சம் கோடி ரூபாய். 49 வயாதாகும், எலான் மஸ்கின் தற்போதைய சொத்து மதிப்பு, 12.38 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், எலான் மஸ்க் சொத்து மதிப்பு, 10.34 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து உள்ளது.


latest tamil news




டெஸ்லா நிறுவன பங்குகள் விலை நடப்பு ஆண்டில் மட்டும், 731 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுவும், இந்த மாதத்தில் மட்டும், 70 சதவீதம் அதிகரித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் சந்தை மதிப்பு, கிட்டத்தட்ட, 44.40 லட்சம் கோடி ரூபாயாகும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagercoil Suresh - India,இந்தியா
20-டிச-202012:09:58 IST Report Abuse
Nagercoil Suresh இனி வரும் காலங்களில் பேட்டரி கார்கள் மட்டும் தான் என்பது 90 சதவீதம் உறுதியாகிவிட்டது...டெஸ்லா கார்கள் விலை மிகவும் அதிகம், தற்போது இதன் வடிவமைப்பு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது என்றும் கூறிவிட முடியாது, பாட்டரியினால் இயங்குவதால் பெட்ரோல் பம்புகளுக்கு போகவேண்டிய அவசியம் இல்லை, புகை வராததினால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாது அதே நேரம் "பாட்டெரிக்கு மேல் அமர்ந்திருப்பவர்களுக்கு பாதிப்புவருமா வராதா என்பது போகப்போகத்தான் தெரியவரும்"...இந்தியாவிலுள்ள அநைத்து ஆட்டோக்களுக்கும் பாட்டரியில் இயங்குவதற்கு வழிமுறைகளை மத்தியஅரசு வழங்கலாம், லித்தியம் டெக்கனோலேட்ஜ்க்கு தனி முக்கியத்துவம் கொடுத்து சாதிக்கலாம்...கொரோனாவால் அமேசானிலும் பண மழை பொழிகிறது...
Rate this:
Cancel
20-டிச-202007:50:46 IST Report Abuse
chandran, pudhucherry மாறன் சொத்து மதிப்பை கணக்கில் கொள்ளாமல் விட்டது தவறு. உலக பணக்காரர்கள் வரிசையில் மாறன் முதலிடமும் சசி இரண்டு கனி அக்கா மூன்று பசி நான்கு சுடலை ஐந்து பப்பு ஆறு அவன் மச்சான் ஏழு இன்னும் டீம்கா முன்னாள் அமிச்சருங்கோ இந்நாள் அடீம்கா அமிச்சருச்கோ இதுக்கப்பாலதான் எவனும் பட்டியலில் கியூல வரனும். என்ன பினாமி பெயரில் சொத்துங்க இருக்கும். அதையும் ஆதார் கார்டு மூலம் இணைத்து ரெய்டு உட்டா கவர்மென்ட் கு நல்ல வருமானம் வரும்
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
20-டிச-202007:37:26 IST Report Abuse
கொக்கி குமாரு சுடலை மைண்ட் வாய்ஸ்: எலான் மாஸ்க்குக்கு விவரம் பத்தலை. இவ்வளவு தூரம் கஷடப்பட்டு உழைத்து சம்பாதிக்கணுமா. எங்க அப்பா மாதிரி ஒரு தொழிலும் செய்யாமல் நாங்கள் எங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருக்கிறோம். வேண்டுமானால் எலான் மாஸ்க் எங்களிடம் வந்தால் உழைக்காமல் எப்படி சொத்து சேர்ப்பது என்ற வித்தையை சொல்லிக் கொடுக்கிறோம். எலான் மாஸ்க் மைண்ட் வாய்ஸ்: வந்திடுவேன், ஆனால் நீங்கள் குண்டர்கள், ரௌடிகள், அல்லக்கைகள், தலைமுறை குடும்ப கொத்தடிமைகள் இவர்களை கொண்டு என்னை மிரட்டி எனது சொத்தையே எழுதி வாங்கிவிடுவீர்களோ என்று பயமாக இருக்கிறது
Rate this:
Balaji - Chennai,இந்தியா
20-டிச-202013:17:34 IST Report Abuse
Balajiசும்மா பிரிச்சி மேயறீங்க பாஸ்.. கேரி ஆன்...ஹி ஹி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X