பருவநிலை ஒப்பந்தத்தில் தீவிரம் காட்டும் ஜோ பைடன்

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன்: 2016-ஆம் ஆண்டு பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து டிரம்பின் அமெரிக்க அரசு கருத்து வேறுபாடு காரணமாக விலகியது. தற்போது உருவாகவிருக்கும் ஜோ பைடன் அரசு மீண்டும் ஒப்பந்தத்தில் இணைய முடிவெடுத்து அதற்கான அதிகாரிகளை நியமித்து வருகிறார். வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் தான் செய்யவேண்டிய அவசர பணிகள் குறித்து

வாஷிங்டன்: 2016-ஆம் ஆண்டு பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து டிரம்பின் அமெரிக்க அரசு கருத்து வேறுபாடு காரணமாக விலகியது. தற்போது உருவாகவிருக்கும் ஜோ பைடன் அரசு மீண்டும் ஒப்பந்தத்தில் இணைய முடிவெடுத்து அதற்கான அதிகாரிகளை நியமித்து வருகிறார்.



latest tamil news



வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். பதவியேற்றதும் தான் செய்யவேண்டிய அவசர பணிகள் குறித்து தற்போது அவர் திட்டமிட்டு வருகிறார். கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது, தடுப்பு மருந்துகளை விரைவில் அனைத்து மாகாணங்களுக்கும் விநியோகிப்பது, அமெரிக்க பொருளாதாரத்தை சீர் செய்வது, பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த குழுக்களை நியமித்து வருகிறார்.

ஜோ பைடனின் சொந்த மாகாணமான டெல்வரில் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க செயற்குழு அதிகாரிகளுடன் அறிமுகம் செய்து வைத்தார். மாறிவரும் பருவ சூழல் காரணமாக உலக வெப்பமயமாதல் அதிகரித்துவருகிறது. அடுத்த 5 ஆண்டுகள் அமெரிக்காவில் உள்ள கார்பன் புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை கட்டுப்படுத்த ஜோ பைடன் திட்டமிட்டு வருகிறார்.


latest tamil news



பருவநிலை ஒப்பந்தத்திற்கு இன்னும் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் தனது திட்டங்களில் ஜோ பைடன் உறுதியாக உள்ளார். ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி வகித்த காலத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அப்போது அதற்கு தலைவராக கினா மெக்கார்தி நியமிக்கப்பட்டார்.

தற்போது வட கரோலினா மாகாண சுற்றுச்சூழல் ஆர்வலர் மைக்கேல் ரீகனை ஜோ பைடன் தலைவராக்க முன்மொழிந்துள்ளார். இவரது தலைமையில் தற்போது பருவநிலை பாதுகாப்பு செயல்பாடுகள் நடைபெறும்.

இயற்கை எரிவாயுவை பயன்படுத்த வேண்டுமென்று ஜோ பைடன் பல ஆண்டு காலமாக வலியுறுத்தி வருகிறார் தனது ஆட்சியில் இதனை நிறைவேற்ற அவர் முடிவு எடுத்துள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopalakrishnan - Sriviliiputtur,இந்தியா
20-டிச-202009:11:49 IST Report Abuse
gopalakrishnan பருவநிலை மாற்றத்திற்கான ஒப்பந்தத்தில், உலக பொருள்கள் உற்பத்தியும், வியாபாரியுமான அமெரிக்கா கையெழுத்திட்டால், வளரும் நாடுகள் மீது அமெரிக்கா பருவநிலை மாற்றத்துக்கான ஒப்பந்தப்படி நடக்க கட்டாயப்படுத்தும் ஆபத்தும் உள்ளது. மேலும், கார்பனை கட்டுப்படுத்தும் கருவிகளை வளரும் நாடுகளிடம் அமெரிக்கா கட்டாயமாக விற்பனை செய்யும். இதனால், பல லக்ஷம் கோடி டாலர்களை அமெரிக்கா சம்பாதித்து இன்னும் செழிப்பாகும். உலகில் அதிகம் கார்பன் வெளியிடும் சீன சந்தை பாதிக்கும். இதனால், அமெரிக்கா-சீனா மோதல் மேலும் பெரிதாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X