திங்கள் முதல் ஞாயிறு வரை (21.12.2020 - 27.12.2020 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.
மேஷம்
சந்திரன், குரு, புதன் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
அசுவினி: புதியவரின் நட்பால் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சகஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவுக்கு இருக்கும். உடல்நலம் பற்றிய பயம் வேண்டாம். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.
பரணி: வியாபாரத்தில் புது தொடர்பு கிடைத்தால் அதன் நம்பகத்தன்மையை ஆராயுங்கள். பெரிய அதிர்ஷ்டம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களில் அனுகூலமான முடிவுகள் வரும்.
கார்த்திகை 1: பணியாளர்கள் தற்போது எந்தவொரு புதிய மாற்றமும் செய்ய வேண்டாம். நண்பர்களின் தியாகம் உங்களை நெகிழ வைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். முயற்சிகள் வெற்றி அடையும்.
ரிஷபம்

புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் உண்டு. துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
கார்த்திகை 2,3,4: ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முயற்சிகளில் ஓரளவுக்காவது அனுகூலம் உண்டாகும். பிறருடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளிடம் இருந்து சில உதவிகள் கிடைத்து நெகிழ வைக்கும்.
ரோகிணி: வீடு கட்டுவதற்கான துவக்க வேலைகளை தொடங்குவீர்கள். வரவேண்டிய பணம் அசல், வட்டியுடன் வசூலாகும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்தவர்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்தால் போதும்.
மிருகசீரிடம் 1,2: சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்ற, இறக்கம் இருக்கும். காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. கடந்த காலத்தில் உங்களை துாற்றியவர்கள் போற்றுவார்கள்.
மிதுனம்
ராகு, கேது, புதன் நன்மைகளை வழங்குவர். குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.
மிருகசீரிடம் 3,4: பணம் கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். பெண்களின் எதிர்பார்ப்புகள் கூடும். திட்டமிட்ட விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வாரக்கடைசியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
திருவாதிரை: கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும் வாங்காமல் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை சற்று குறைவாகத் தான் இருக்கும். பெண்கள் குடும்ப நலனில் மிகுந்த அக்கறை கொள்வர்.
புனர்பூசம் 1,2,3: உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும், அசையா சொத்துக்கள் வாங்குவதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.
கடகம்
குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். மீனாட்சி வழிபாடு நன்மை தரும்.
புனர்பூசம் 4: தந்தை வழி உறவினர்கள் ஓரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். வீடு வாங்கும் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தோர் உதவுவர். பெரியோரின் ஆலோசனை உதவும். வீண் வம்புக்கு போக வேண்டாம்.
பூசம்: பங்குச்சந்தை வியாபாரம், லாட்டரி போன்றவற்றில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கோயில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய நண்பர்கள் இடையே அளவோடு பழகுவது நல்லது.
ஆயில்யம்: உல்லாசப் பொழுது போக்குத் திட்டம் நிறைவேறும். கலைத்துறையினர் முயற்சியை அதிகரிப்பீர்கள். பழி ஏற்படுத்தும் செயல்கள் எதுவும் செய்ய வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 21.12.2020 காலை 6:00 - இரவு 8:14 மணி
சிம்மம்
செவ்வாய், புதன், சூரியன் அதிர்ஷ்டமான பலன்களை தருவர். குருவாயூரப்பன் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: புதிய முயற்சிகள் சாதகமாகும். வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
பூரம்: வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் எளிதாக சமாளிப்பீர்கள்.
உத்திரம் 1: வீண் வம்புகளில் ஈடுபட வேண்டாம். வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் நட்பு பெருகும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம்: 21.12.2020 இரவு 8:15 - 24.12.2020 காலை 7:10 மணி
கன்னி
குரு, சந்திரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
உத்திரம் 2,3,4: உடல்நலம் சோர்வாக இருப்பதுபோல் தோன்றும். அது வெறும் கற்பனையே. பணியாளர்கள் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் புரணி பேசுவதை தவிர்ப்பது நலம் தரும்.
அஸ்தம்: உற்றார் உறவினரிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அதை நீங்கள் இருபுறமும் பேசிச் சமாதானம் செய்வீர்கள். சில புதுமைகளை படைப்பீர்கள். பணியாளர்களுக்கு புதிய சுமைகள் ஏற்படக்கூடும்.
சித்திரை 1,2: கலைத்துறையினருக்கு கற்பனை விரிவடையும். பொதுவாழ்வில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கு தக்க சமயத்தில் ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள். சிலர் வீண்பழியை எதிர்கொள்ள நேரிடக்கூடும்.
சந்திராஷ்டமம்: 24.12.2020 காலை 7:11 - 26.12.2020 மாலை 6:55 மணி
துலாம்
குரு, புதன், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். காமாட்சி வழிபாடு சுபிட்சம் தரும்.
சித்திரை 3,4: பணியாளர்கள் திறம்பட செயல்படுவீர்கள். ஆனாலும் மேலரதிகாரியின் பாராட்டுதலை பெறுவது கடினம். உடன்பிறந்தோரின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
சுவாதி: வேலை தேடுவோருக்கு சிறு தடைக்கு பிறகே நற்செய்தி கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பது நல்லது.
விசாகம் 1,2,3: பிள்ளைகளின் திறமை வெளிப்படுவதால் பெருமை ஏற்படும். சமூகத்திலும், வீட்டிலும் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 26.12.2020 மாலை 6:56 மணி - 27.12.2020 நாள் முழுவதும்
விருச்சிகம்
சூரியன், சந்திரன், சுக்கிரன் அனுகூல பலனைத் தருவர். அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
விசாகம் 4: கணவன், மனைவி இடையே இருந்த சண்டைகள் தீரும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள்.
அனுஷம்: பல காலம் எதிர்பார்த்த செயல் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி உண்டு. நண்பர்களுக்கு சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
கேட்டை: நண்பர்களின் அவசரப்போக்கினால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். செலவுக்கேற்ற திடீர் வருமானம் ஒன்று வரும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
சந்திரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.
மூலம்: சிலருக்கு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை தவிர்த்து அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வீடு அமைதிப் பூங்காவாக மாறும். மன தைரியம் அதிகரிக்கும்.
பூராடம்: சிலரின் சந்திப்பு காரணமாகப் பழைய விஷயங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் மாறி ஒற்றுமை அதிகரிக்கும். கணவர் வழி உறவினர்கள் உங்களிடம் பாசம் பொழிவார்கள்.
உத்திராடம் 1: பயணம் செல்ல உற்சாகமாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். சிலருக்கு அலைச்சல் ஏற்படும். சுபச்செலவுகள் ஏற்படுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
மகரம்
செவ்வாய், புதன், சந்திரனால் நன்மை கிடைக்கும். சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.
உத்திராடம் 2,3,4: பிள்ளைகளின் திடீர் மாற்றத்தால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாரக்கடைசியில் நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள்.
திருவோணம்: பிறரை மகிழ்வித்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தோர் உங்களை புரிந்து கொள்வர். சக வியாபாரிகளால் இருந்து வந்த தொல்லை நீங்கும். பகை பாராட்டிய உறவினர்கள் இணைந்து கொள்வார்கள்.
அவிட்டம் 1,2: நீங்கள் சற்றும் எதிர்பாராத நபர் ஒருவர் மனம் விட்டுப்பேசுவார். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும். பணியாளர்களின் வேலைத் திறமை மதிக்கப்படும். சிலருக்கு பரிசுகள் கிடைக்கும்.
கும்பம்
புதன், சுக்கிரன், செவ்வாயால் அளப்பரிய நன்மை கிடைக்கும். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
அவிட்டம் 3,4: குழந்தைகள் உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். இயல்புக்கு மாறாக அனைவருடனும் சுமுகமாகப் பழகுவீர்கள். பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். எதிரிகள் மனம் மாறுவார்கள்.
சதயம்: வியாபாரத்தில் இதுவரை இருந்த போட்டிகள் விலகும். பணியிடத்தில் மறைமுக எதிர்ப்புகள் அடங்குவதால் நிம்மதி ஏற்படும். கலைத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு நற்பெயரை பெறுவீர்கள்.
பூரட்டாதி 1,2,3: சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். ஆனால் சம்பள உயர்வு கிடைக்காது. விவாதங்களை தவிர்த்தால் மன உளைச்சலை தடுக்கலாம். உடன்பிறந்தவர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும்.
மீனம்
குரு, புதன், ராகு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
பூரட்டாதி 4: கணவரின் மனம் கவரும்படியாக நடந்து கொள்வீர்கள். தாயின் உடல்நலம் பற்றிய கவலை தீரும். வியாபாரத்தில் தனவரவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: மனதிற்கு பிடித்தமானவர் கூறும் அறிவுரையை ஏற்று நடப்பீர்கள். தேவையற்ற கவலைகளை மறந்து பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பிப்பீர்கள். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.
ரேவதி: வெளிநாட்டில் பணிபுரிவதற்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை. ஆனால் விரைவில் அது நிறைவேறும். பங்குச் சந்தையில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். நல்லவர்களின் ஆசி கிடைக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE