ஈரோடு: ஈரோட்டில், கடன் தொல்லையால் பெயின்டர் விபரீத முடிவு எடுத்தார். ஈரோடு, ராஜீவ் நகர் கரூர் பைபாஸ் ரோடு, எஸ்.கே பில்டிங்கை சேர்ந்த பால சுப்பிரமணியன் மகன் தட்சிணாமூர்த்தி, 30; பெயின்டர். திருமணமானவர். ஈரோடு சடையம்பாளையம் ரோடு சாஸ்திரி நகரில் உள்ள தந்தை வீட்டுக்கு, கடந்த, 16ல் சென்றார். அங்கு இரவு, 10.15 மணிக்கு விஷ மருந்தை குடித்தார். உயிருக்கு ஆபத்தமான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை இறந்தார். ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தட்சிணா மூர்த்தி அதிகளவில் கடன் வாங்கி இருந்ததும், கடனை அடைக்க முடியாமல் மன வருத்தத்தில் விஷம் குடித்தது விசாரணையில் தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE