சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின் வேலியில் சிக்கி யானை பலி: தோட்ட உரிமையாளர் தலைமறைவு

Added : டிச 20, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகத்தை ஒட்டியுள்ள அருள்வாடி கிராமத்தில் காளய்யா, 70, என்பருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, அருகேயுள்ள, விவசாயி புட்டுராஜ், 57, நிலத்தில் யானை ஒன்று யானை இறந்து

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகத்தை ஒட்டியுள்ள அருள்வாடி கிராமத்தில் காளய்யா, 70, என்பருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. தோட்டத்தை சுற்றிலும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, அருகேயுள்ள, விவசாயி புட்டுராஜ், 57, நிலத்தில் யானை ஒன்று யானை இறந்து கிடந்தது. ஜீரஹள்ளி வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இறந்தது, 10 வயதுடைய ஆண் யானை என தெரிந்தது. காளய்யா நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரை, வனவிலங்குகள் சேதப்படுத்தாமல் தடுக்க, மின்வேலி அமைத்து, அதில் சட்டவிரோதமாக உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சியதும், மின்வேலியில் சிக்கி, யானை உயிரிழந்ததும் தெரியவந்தது. யானையின் உடலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் குழுவினர் உடற்கூறு பரிசோதனை செய்தனர். இந்நிலையில், காளய்யா தலைமறைவாகி விட்டார். வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X