ஈரோடு: ராட்சத நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது
ஈரோடு வ.உ.சி. பூங்காவில், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிக்காக, 114 லட்சம் லிட்டர் தண்ணீர் தேக்க கூடிய வகையில், ராட்சத மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. குடிநீர் திட்டப்பணிக்காக தண்ணீரின் அழுத்தத்தினை சோதனை செய்யும்போது அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் வீணாக ஓடி வருகிறது. இந்நிலையில், நீர்த்தேக்க தொட்டியில் நேற்று தண்ணீர் பம்ப் செய்து கசிவு சோதனை செய்யும் பணி நடந்தது. அப்போது, தொட்டியில் தண்ணீர் நிரம்பி நான்கு மணி நேரத்திற்காக மேலாக, பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக, பவானி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குழாய் உடைந்தது என பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'குடிநீர் குழாய் உடைப்பு ஏதுவும் ஏற்படவில்லை. பம்பிங் டெஸ்ட் நடக்கும் போது இது போல் தண்ணீர் வெளியேற கூடும். ஆனால், தொட்டி நிரம்பியதை ஊழியர்கள் கவனிக்காததால், இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், உடனடியாக தண்ணீர் பம்ப் செய்வது நிறுத்தப்பட்டது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE