சேலம்: மத்திய அரசின், பிட் இந்தியா இணையதளத்தில், அனைத்து பள்ளிகளும் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின், இளைஞர் நலன், விளையாட்டு துறை சார்பில், 'பிட் இந்தியா' எனும் இணையதளம் தொடங்கப்பட்டு, பள்ளி மாணவ, மாணவியர் உடல் இயக்க செயல்பாடு, விளையாட்டுகளை ஊக்குவிக்க, சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதில், பதிவு செய்யும் பள்ளிகளுக்கு, அதன் நடவடிக்கையை பொறுத்து, '3 ஸ்டார், 5 ஸ்டார்' அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பதிவு செய்ய, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவுப்படி, சேலத்தில் உள்ள பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம், அனைத்து பள்ளிகளையும், இணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE