கிராமங்களில் பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கிராமங்களில் பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது'

Added : டிச 20, 2020
Share
அரூர்: ''கிராமங்களில், பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது,'' என, அரூர் சட்டசபை தொகுதி பா.ஜ., மேற்பார்வையாளர் முத்துசுவாமி கூறினார்.அரூரில், நேற்று அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில், அரூர் தொகுதியை, பா.ஜ.,வுக்கு ஒதுக்க வலியுறுத்துவோம். போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், அரூரில் வெற்றி பெறுவோம். கிராமப்புறங்களில் பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அரூர்: ''கிராமங்களில், பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது,'' என, அரூர் சட்டசபை தொகுதி பா.ஜ., மேற்பார்வையாளர் முத்துசுவாமி கூறினார்.


அரூரில், நேற்று அவர், நிருபர்களிடம் மேலும் கூறியதாவது: அ.தி.மு.க., கூட்டணியில், அரூர் தொகுதியை, பா.ஜ.,வுக்கு ஒதுக்க வலியுறுத்துவோம். போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், அரூரில் வெற்றி பெறுவோம். கிராமப்புறங்களில் பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறுவோம். அரூரில், பா.ஜ., வெற்றி பெற்றால், வேளாண் கல்லூரி மற்றும் காவேரி, தென்பெண்ணை ஆற்று உபரி நீரை அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்ப நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, அரூர் நகரத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X