பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாடு வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

Added : டிச 20, 2020
Share
Advertisement
பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி, வேளாண் அறிவியல் நிலையத்தில், அறிவியல் முறையில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பென்னாகரம் அடுத்த நாகமரையில் நடந்த இந்த நிகழ்ச்சியை, நிலைய வேளாண் விரிவாக்கத்துறை விஞ்ஞானி வெண்ணிலா துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர்

பாப்பாரப்பட்டி: பாப்பாரப்பட்டி, வேளாண் அறிவியல் நிலையத்தில், அறிவியல் முறையில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், பென்னாகரம் அடுத்த நாகமரையில் நடந்த இந்த நிகழ்ச்சியை, நிலைய வேளாண் விரிவாக்கத்துறை விஞ்ஞானி வெண்ணிலா துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், ''வெள்ளாடு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்க்கும் போது, இவை நன்றாக வளர்ந்து, இறைச்சி அதிகளவில் கிடைக்கும். இதனால், இதை வளர்க்கும் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்,'' என்றார். இதில் கலந்து கொண்ட, 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், கண்டுணர்வு சுற்றுலாவாக, மேச்சேரியில் உள்ள ஆட்டுப்பண்ணை மற்றும் பொட்டனேரி ஆட்டுப்பண்ணைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, ஆடு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு, தீவன விதைகள், தாது உப்பு கட்டி, அசோலா தார்பாலின் விரிப்பு, மண்புழு உரம் உற்பத்தி தார்பாலின் விரிப்பு மற்றும் குடல் நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X