பொது செய்தி

தமிழ்நாடு

வரட்டாறு தடுப்பணைக்கு 75 கன அடியாக நீர்வரத்து சரிவு

Added : டிச 20, 2020
Share
Advertisement
அரூர்: வரட்டாறு தடுப்பணைக்கு, நீர்வரத்து குறைந்தநிலையில், நேற்று, தடுப்பணையில் இருந்து வினாடிக்கு, 75 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை,

அரூர்: வரட்டாறு தடுப்பணைக்கு, நீர்வரத்து குறைந்தநிலையில், நேற்று, தடுப்பணையில் இருந்து வினாடிக்கு, 75 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்பட்டி, கௌாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். இந்நிலையில், 'நிவர்' மற்றும் 'புரெவி' புயல் மழையால், கடந்த, 7ல், தடுப்பணையின் மொத்த கொள்ளளவான, 34.45 அடி நிரம்பி, உபரி நீர் வரட்டாற்றில் செல்கிறது. நேற்று முன்தினம், தடுப்பணைக்கு, 156 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை, 75 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. தொடர்ந்து, 75 கன அடி உபரி நீரும், வரட்டாறு மற்றும் இடது வாய்க்கால் வழியாக, குடுமியாம்பட்டி பெரிய மற்றும் புதுஏரிக்கு செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X