பொது செய்தி

தமிழ்நாடு

அடையாளம் காணப்படாதோரின் சடலம்; அடக்கம் செய்ய ஒத்துழைக்காத நகராட்சி

Added : டிச 20, 2020
Share
Advertisement
தர்மபுரி: அடையாளம் தெரியதாவர்களின் சடங்களை அடக்கம் செய்ய, தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தர்மபுரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்த, எட்டு பேரின் உடல்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது. இதுவரை, அவர்களது உடலை பெற

தர்மபுரி: அடையாளம் தெரியதாவர்களின் சடங்களை அடக்கம் செய்ய, தர்மபுரி நகராட்சி நிர்வாகத்தினர் ஒத்துழைக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தர்மபுரி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்த, எட்டு பேரின் உடல்கள், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்தது. இதுவரை, அவர்களது உடலை பெற யாரும் முன்வரவில்லை. இதையடுத்து நேற்று, அவர்களின் உடலை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள, மயானத்தில் அடக்கம் செய்ய போலீசார், நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதற்கு, குழி தோண்ட பொக்லைன் இயந்திரம் மற்றும் பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் அனுப்பவில்லை. இதையடுத்து, போலீசார், தனியார் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி, எட்டு பேரின் உடல்களையும் அடக்கம் செய்தனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, 'நகராட்சி பணியாளர் ஒருவரது துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க, தூய்மை பணியாளர்கள் சென்று விட்டனர். வழக்கம் போல், ஒரு பணியாளரை அனுப்புவதாக தெரிவித்தோம். ஆனால், போலீசார் கூடுதல் பணியாளர்களை அனுப்ப கேட்டனர். மேலும், பொக்லைன் இயந்திரம் எப்.சி.,யால் அதை அனுப்ப முடியாது என, போலீசாரிடம் விளக்கம் அளித்தோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X