பொது செய்தி

தமிழ்நாடு

8 வழிச்சாலை திட்டத்தை கைவிட ஓய்வூதியர் சங்கம் தீர்மானம்

Added : டிச 20, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, முப்பெரும் விழாவில், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், ஐந்தாவது மாவட்ட பேரவை கூட்டம், ஓய்வூதியர் தினவிழா மற்றும், 75 வயதை கடந்த

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க, முப்பெரும் விழாவில், எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின், ஐந்தாவது மாவட்ட பேரவை கூட்டம், ஓய்வூதியர் தினவிழா மற்றும், 75 வயதை கடந்த ஓய்வூதியர்கள் கவுரவிப்பு என, முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். விழாவில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களில், தொழிலாளர்களுக்கு விரோதமாக திருத்தங்கள் செய்யக்கூடாது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்க வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து, கிருஷ்ணகிரி வழியாக, ஓசூர் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். அஞ்செட்டி, போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு, தனி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள், ராஜா மந்திரி, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X