சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகையில் நில அபகரிப்பு புகார்: தி.மு.க.,பிரமுகர் மீண்டும் கைது

Added : டிச 20, 2020
Share
Advertisement
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட கீழையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் நில அபகரிப்பு புகாரில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார். நாகை அடுத்த வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன், 40. இவர் முன்னாள் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவராவும், தற்போதைய கீழையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளராகவும் உள்ளார். வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் மற்றும் ஆரோக்கியமாதா தேவாலயத்திற்கு சொந்தமான

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட கீழையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் நில அபகரிப்பு புகாரில் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டார். நாகை அடுத்த வேளாங்கண்ணியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்வா எடிசன், 40. இவர் முன்னாள் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவராவும், தற்போதைய கீழையூர் ஒன்றிய தி.மு.க., செயலாளராகவும் உள்ளார். வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் மற்றும் ஆரோக்கியமாதா தேவாலயத்திற்கு சொந்தமான இடங்களை, ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, அ.தி.மு.க., பிரமுகர், கடந்த செப்.,மாதம் அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார். இந்நிலையில், வேளாங்கண்ணி அடுத்துள்ள வடக்குபொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த வசந்தி என்பவர், தங்கள் தந்தை ராஜமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான, 39 சென்ட் நிலத்தை எடிசன்,அவரது தந்தை ஆரோக்கியராஜ்,சகோதரர் மரியநிக்சன் ஆகியோரின் பெயரில், போலி ஆவணம் மூலமாக செட்டில்மெண்ட் செய்துள்ளதாக, நாகை, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு,மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசார், எடிசனை கைது செய்து, நேற்று நாகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X