அரூர்: முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், அரூர் அருகே, கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூரில், தமிழக முதல்வர் பழனிசாமி எட்டு வழிச்சாலைக்கு, 92 சதவீத விவசாயிகள் ஆதரவு தெரிவிப்பதாக, பொய்யான தகவலை கூறியதாக தெரிவித்து, தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சுமைதாங்கிமேட்டில், நேற்று காலை, 11:30 மணிக்கு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர், கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தினர். அப்போது, எட்டு வழிச்சாலைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளின் விபரத்தை, வெள்ளை அறிக்கையாக வெளியிட வலியுறுத்தினர். இதில், எட்டு வழிச்சாலைக்கு நில அளவீடு செய்யப்பட்ட, 45க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, அரூர் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் கைது செய்ய சென்றனர். அவர்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். சம்பவ இடம் வந்த, அரூர் டி.எஸ்.பி., தமிழ்மணி, அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE