சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூர் வி.எச்.பி., நிர்வாகி கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Added : டிச 20, 2020
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், மாவட்ட செயலாளர் காரில், பெட்ரோல் குண்டுகளை வீசி, தீ வைத்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அலசநத்தத்தை சேர்ந்தவர் நரசிம்மன், 39; தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்; கடந்த, 17 இரவு, 10:00 மணிக்கு, தன் மாருதி ஸ்விப்ட் காரை, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார்.

ஓசூர்: ஓசூரில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத், மாவட்ட செயலாளர் காரில், பெட்ரோல் குண்டுகளை வீசி, தீ வைத்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், அலசநத்தத்தை சேர்ந்தவர் நரசிம்மன், 39; தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்; கடந்த, 17 இரவு, 10:00 மணிக்கு, தன் மாருதி ஸ்விப்ட் காரை, வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர், மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசி, காருக்கு தீ வைத்தனர். இதை பார்த்த நரசிம்மன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக தீயை அணைத்தார். அவரது வீட்டின் முன்பும் தீ பரவியது. உடனடியாக தீயை அணைத்ததால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ஓசூர், ஹட்கோ போலீசார், நேற்று முன்தினம் இரவு வழக்குப்பதிவு செய்தனர். நரசிம்மன் மீது ஏற்பட்ட முன்விரோதத்தில், மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசியது விசாரணையில் தெரியவந்தது. மேலும், நரசிம்மன் வீட்டிலிருந்த, 'சிசிடிவி' கேமராவில், மர்ம கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி, தீ வைத்த காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X