சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொத்தமல்லி வியாபாரி ஓட ஓட விரட்டி கொலை

Added : டிச 20, 2020
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அருகே, கொத்தமல்லி வியாபாரி, மர்ம கும்பலால் ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தொட்டூரை சேர்ந்தவர் ராஜப்பா, 55, விவசாயி; கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்தார்; அவருக்கு, வள்ளியம்மாள், 45, என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். நேற்று காலை, 8:00 மணிக்கு, சூளகிரிக்கு, கும்பளம் சாலையில், தன் ஆக்டிவா

ஓசூர்: சூளகிரி அருகே, கொத்தமல்லி வியாபாரி, மர்ம கும்பலால் ஓட, ஓட விரட்டி குத்திக் கொலை செய்யப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த தொட்டூரை சேர்ந்தவர் ராஜப்பா, 55, விவசாயி; கொத்தமல்லி வியாபாரம் செய்து வந்தார்; அவருக்கு, வள்ளியம்மாள், 45, என்ற மனைவியும், இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். நேற்று காலை, 8:00 மணிக்கு, சூளகிரிக்கு, கும்பளம் சாலையில், தன் ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ராஜப்பா சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கை வழிமறித்த மர்ம கும்பல் அவரை, ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு தப்பியது. சூளகிரி போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் ராஜப்பாவுக்கும், அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே நிலப்பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் அளித்த புகாரின்படி, சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ராஜப்பா கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், அவரது கொலைக்கு நிலப்பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்தில், சூளகிரி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கொலைச் சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓசூர், அரசு மருத்துவமனையில், பிரேத பரிசோதனை முடிந்து, நேற்று மாலை, ராஜப்பாவின் சடலம், தொட்டூர் கிராமத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு அவரது உறவினர்கள், சடலத்தை வாங்காமல், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, சூளகிரி - கும்பளம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். சூளகிரி இன்ஸ்., முத்து கிருஷ்ணன், குற்றவாளிகளை விரைவில் கைது செய்து விடுவோம் என உறுதி அளித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு, ராஜப்பாவின் சடலத்தை உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X