தமிழ்நாடு

விளைச்சல் அதிகரிப்பால் செங்கரும்பு விலை சரிவு: விவசாயிகள், வியாபாரிகள் கவலை

Added : டிச 20, 2020
Share
Advertisement
நாமக்கல்: கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, விளைச்சல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு விலை சரிந்துள்ளது.தை மாதம் என்றாலே, பொங்கல் பண்டிகைதான் நினைவுக்கு வரும். தை முதல் நாள், வாசல் பொங்கல், இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் கொண்டாடுவர். இந்த நாளில், செங்கரும்பு முக்கிய இடம் பெறும். அதற்காக, பல்வேறு இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில்,

நாமக்கல்: கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு, விளைச்சல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு விலை சரிந்துள்ளது.


தை மாதம் என்றாலே, பொங்கல் பண்டிகைதான் நினைவுக்கு வரும். தை முதல் நாள், வாசல் பொங்கல், இரண்டாம் நாள், மாட்டுப்பொங்கல் கொண்டாடுவர். இந்த நாளில், செங்கரும்பு முக்கிய இடம் பெறும். அதற்காக, பல்வேறு இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், காரவள்ளி பகுதியிலும், பள்ளி பாளையம், சமயசங்கிலி உள்ளிட்ட இடங்களிலும், அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், ஆண்டு தோறும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய் இவற்றுடன், செங்கரும்பும் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காகவும், விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது, செங்கரும்பு அறுவடை செய்து, சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால், அதன் விலையும் குறைந்துள்ளது. இது, விவசாயிகள், வியாபாரிகளை கவலையடையச் செய்துள்ளது.

இது குறித்து, சேந்தமங்கலம் வியாபாரி சேவகன், 60, கூறியதாவது: சேந்தமங்கலம், காரவள்ளி பகுதிகளில் விளைவிக்கப்பட்ட செங்கரும்பு, விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை போன்றவற்றுக்கு, 150க்கும் மேற்பட்ட லோடுகள் விற்பனை செய்துவிட்டனர். தற்போது, அப்பகுதியில் செங்கரும்பு சுத்தமாக இல்லை. பள்ளிபாளையம், சமயசங்கிலி உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே உள்ளது. தொடர்மழை காரணமாக, தோட்டங்களில் தண்ணீர் தேங்கி, கரும்புகள் சாய்ந்துள்ளன. அதனால், தோகைகள் அழுகி, வெறும் கரும்பு மட்டுமே உள்ளன. ஒரு ஜோடி கரும்பு, 60, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, விளைச்சல் குறைந்ததால், ஒரு ஜோடி கரும்பு, 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால், விலையும் சரிந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X