தமிழ்நாடு

எதிரிகளை அழித்து வெற்றி தரும் பஞ்சமி திதியில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவக்கிய முதல்வர்

Added : டிச 20, 2020
Share
Advertisement
எதிர்ப்புகளையும், எதிரிகளையும் அழித்து, காரியத்தில் வெற்றி தரும், 'வராஹி' பிறந்த, பஞ்சமி திதியான நேற்று முதல்வர் பழனிசாமி, 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார்.கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில், தேர்தலை சந்தித்து, அவர் மறைவுக்குப்பின், 2017 பிப்., 16ல் பழனிசாமி முதல்வரானார். மகர ராசி, உத்திராட நட்சத்திரம், மகர லக்கனத்தில் பிறந்த இவருக்கு, அன்றைய

எதிர்ப்புகளையும், எதிரிகளையும் அழித்து, காரியத்தில் வெற்றி தரும், 'வராஹி' பிறந்த, பஞ்சமி திதியான நேற்று முதல்வர் பழனிசாமி, 2021 சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை துவக்கினார்.


கடந்த, 2016 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையில், தேர்தலை சந்தித்து, அவர் மறைவுக்குப்பின், 2017 பிப்., 16ல் பழனிசாமி முதல்வரானார். மகர ராசி, உத்திராட நட்சத்திரம், மகர லக்கனத்தில் பிறந்த இவருக்கு, அன்றைய தேதியில், சனி திசை, சுக்கிர புத்தியில் முதல்வராகும் வாய்ப்பு பெற்றார். வரும், 2021 சட்டசபை தேர்தலை, தன் தலைமையில், அ.தி.மு.க., சந்திப்பதால், பல்வேறு வகையில் ஆராய்ந்து, ஜோதிடர்களின் ஆலோசனைப்படி, ஜாதக, ராசி, கால நகர்வுக்கு இடையே நேற்று பிரசாரத்தை துவக்கினார்.

இதுபற்றி, பிரபல ஜோதிடர்கள் கூறியதாவது: இன்று(நேற்று) காலை, 10:30 மணிக்கு ராகு காலம் முடிந்து, 10:41 மணிக்கு அமிர்த யோகம் துவங்கியது. அதற்கு பின், 10:45 மணிக்கு, தன் சேலம் வீட்டிலிருந்து தேர்தல் பிரச்சாரத்துக்கு புறப்பட்டார். ஏற்கனவே திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வந்த முதல்வர், நேற்று சனி மூலையில் உள்ள, சேலம் மாவட்டம், பெரியசோரகை சென்றாய பெருமாளை, 11:30 மணிக்கு தரிசித்து விட்டு, பிரசாரத்தை துவக்கினார். நேற்று பஞ்சமி திதியாகும். பஞ்சமி திதி என்பது, எதிர்ப்புகளையும், எதிரிகளையும் துவம்சம் செய்து, தீய சக்திகளை அழித்து, நாம் செயல்படுத்தும் காரியத்தில் வெற்றியை குவிக்கும் காலமாகும். இக்காலத்தில் துவங்கும் செயலுக்கு பலமும், பலனும் கிட்டும். அத்துடன், சப்த கன்னிகள், சப்த மாதர்களில் ஒருவரான வராஹி, பஞ்சமி திதியில் பிறந்தவர். அம்பிகையின் சேனைத்தலைவன் என்ற ரீதியில் வராஹியை, மாமன்னன் ராஜராஜசோழன் அன்றாடம் வழிபட்டார். தான் போருக்கு செல்லும் முன் வராஹியை வழிபட்டு செல்வதுடன், போரின் வெற்றியையும், வராஹிக்கே காணிக்கையாக்கி வந்தார். அதன்படி, வெற்றி தரும் வராஹிக்கு உகந்த நாளை தேர்வு செய்து, பிரசாரத்தை துவக்கியுள்ளார் முதல்வர் பழனிசாமி. வரும், 27 ல் சனி பெயர்ச்சி நடக்க உள்ளது. இதற்கு முன்பாக பிரசாரத்தை துவக்க திட்டமிட்ட முதல்வர், பெருமாளுக்கு உகந்த, வெற்றி தரும் சனிக்கிழமை, பஞ்சமி திதியில் பிரசாரத்தை துவக்கி, மீண்டும் வெற்றியடைய திட்டமிட்டு, அதன்படி, சென்றாயப்பெருமாள் கோவிலுக்கு வெளியில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். இவ்வாறு கூறினர்

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X