வேலூர்: தனியார் கல்லூரியில், 'சீட்' பெற்று தருவதாக, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த, பா.ம.க., மாஜி கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உ.பி., மாநிலம், வாரணாசியை சேர்ந்தவர் சஞ்சய்குப்தா, 57; மிளகாய் வற்றல் தொழில் செய்கிறார். இவரது மகன், ஹரீஷ்குப்தா, 20; இவருக்கு, ஆந்திரா மாநிலம், அமராவதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், 2017ல் பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு அட்மிஷன் கிடைத்தது. ஆனால் அவர், வேலூரிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்க விரும்பினார். இதற்காக, பொய்கையை சேர்ந்த, பா.ம.க., மாஜி கவுன்சிலர் வெங்கடேசன், 49, என்பவரை சஞ்சய்குப்தா அணுகினார். இதற்கு, 5 லட்சம் ரூபாய் கேட்ட அவரிடம், 2017 நவ.,ல், 5 லட்சம் ரூபாயை, சஞ்சய்குப்தா கொடுத்துள்ளார். ஆனால், வேலூர், தனியார் கல்லூரியில் வெங்கடேசன் அட்மிஷன் பெற்று தரவில்லை. இது குறித்து, சஞ்சய்குப்தா, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார், வெங்கடேசனை நேற்று கைது செய்து, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE