இஸ்ரேலில் தடுப்பூசி போட்டு கொண்ட பிரதமர்

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
டெல் அவிவ்: இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, முதல் நபராக தடுப்பூசியை போட்டு கொண்டார். இதன் மூலம், தடுப்பூசி போட்டு கொண்ட உலக தலைவர்களுல் அவரும் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கிகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தடுப்பூசி போடும்
israel, vaccine, இஸ்ரேல், நேதன்யாஹூ, தடுப்பூசி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19

டெல் அவிவ்: இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, முதல் நபராக தடுப்பூசியை போட்டு கொண்டார். இதன் மூலம், தடுப்பூசி போட்டு கொண்ட உலக தலைவர்களுல் அவரும் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கிகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், மருத்துவமனையில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹூ துவங்கி வைத்து, முதலாவது நபராக, பொது மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை போட்டு கொண்டார்.


latest tamil newsஇதன் பின்னர் அவர் கூறுகையில், இந்த தடுப்பூசி மீதுநம்பிக்கை உள்ளது. இந்த நாள் மிகச்சிறந்த நாளாகும். வழக்கமான பணிகளுக்கு, இந்நாள் இஸ்ரேலை திருப்பியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த வாரம் முதல் பைசர் நிறுவனத்தின் மருந்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாடர்னா மற்றும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் மருந்துகளுக்கும், கொள்முதல் செய்யப்பட உள்ளது. 90 லட்சம் பேர் வசிக்கும் இஸ்ரேலில் தற்போதைய நிலையில், 3,72,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
20-டிச-202016:54:08 IST Report Abuse
J.Isaac இதைபோல் நம் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், மத்திய மாநில அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
Rate this:
Cancel
Anandhan - London,யுனைடெட் கிங்டம்
20-டிச-202015:34:08 IST Report Abuse
Anandhan On 5th May 2020, Israel's Defense Minister claimed his country's biological institute had developed virus antibody. On 19 December 2020, Israel's Prime Minister received the coronavirus vaccine produced by non-Israeli Pfizer/BioNTech. Seems Israel's efforts are not successful yet, however its trial can be appreciated.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X