நாமக்கல்: தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர்கள் உரிமை நாள் விழா, மாநில பொதுக்குழு கூட்டம், நகர கிளை சங்கத்தின், 5ம் ஆண்டு துவக்க விழா என, முப்பெரும் விழா, நாமக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் கோபால் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், பொறியாளர் ராஜேந்திரன், நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் பேசினர். மாநகராட்சி, நகராட்சி அனைத்து ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களையும், அரசு ஓய்வூதியர்களாக அறிவித்து, அவர்களுக்கு, அரசு கருவூலங்கள் மூலம், மாதாந்திர ஓய்வூதியம், இதர ஓய்வூதிய பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, அனைத்து துறை பணியாளர்களுக்கும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, தேவையான நடவடிக்கையை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு, உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE