நாமக்கல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். செயலாளர் சங்கர் தீர்மானங்களை வாசித்தார். மாநில செயலாளர் செல்வராசன், கோரிக்கை குறித்து பேசினார். ஜாக்டோ-ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் வகையில், தொடரப்பட்ட குற்றவியல் வழக்குகள், தொடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியரிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியங்கள், பறிக்கப்பட்ட பதவி உயர்வுகள் போன்றவற்றை திரும்ப வழங்க வேண்டும். தமிழகத்தில், சாதாரண நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். வயது உச்சவரம்பு இன்றி, ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 40 வயது உச்சவரம்பை கைவிட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்று, ஏழாண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்ற அறிவிப்பை திரும்ப பெறவேண்டும். வாழ்நாள் தகுதி சான்று வழங்கி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, 80 ஆயிரம் பேருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். தாய்மொழியில் கல்வி படித்தவர்களுக்கு, தமிழக அரசுப்பணிகளில் அதிகப்படியான முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE