மோகனூர்: நாமக்கல் மாவட்டம், மோகனூர், கரூர் மாவட்டம், வாங்கல் ஆகியவற்றை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே, பாலம் கட்ட வேண்டும் என்ற, இரண்டு மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று, 50 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட தரைவழிப்பாலம் கட்டப்பட்டது. அது, 2016ல் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. தொடர்ந்து, பஸ் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. தற்போது, இரு சக்கர வாகனம், கார், வேன், சரக்கு ஆட்டோ, லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், மோகனூரில் இருந்து, வாங்கல் செல்லும்போது, பாலம் துவங்கும் பகுதியில், சாலையின் நடுவில் கான்கிரீட் பெயர்ந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில், இவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், இந்த பள்ளத்தில் இறங்கி, நிலைதடுமாறி கீழே விழும் நிலைக்கு செல்கின்றனர். பல நாட்களாக காணப்படும் இந்த பள்ளம், சம்பந்தப்பட்ட துறையினர் கண்ணில் படாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE