பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.77 கோடியில் சுற்று வட்டச்சாலை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Added : டிச 20, 2020
Share
Advertisement
கரூர்: ''கரூர், குட்டக்கடை முதல், வீரராக்கியம் வரை, 77 கோடி ரூபாய் மதிப்பில் சுற்று வட்டச் சாலை அமைக்கப்படுகிறது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.கரூர் ஒன்றியம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், சோமூர் ஆகிய பஞ்சாயத்துகளில், 2.31 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பூமி பூஜை

கரூர்: ''கரூர், குட்டக்கடை முதல், வீரராக்கியம் வரை, 77 கோடி ரூபாய் மதிப்பில் சுற்று வட்டச் சாலை அமைக்கப்படுகிறது,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


கரூர் ஒன்றியம், மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, நெரூர் வடபாகம், நெரூர் தென்பாகம், சோமூர் ஆகிய பஞ்சாயத்துகளில், 2.31 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் பூமி பூஜை செய்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: நெரூர்- உன்னியூர் இடையே, 85 கோடி ரூபாய் மதிப்பில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஈரோடு சாலை குட்டக்கடை முதல் வீரராக்கியம் வரை, சுற்று வட்டச்சாலை அமைக்கப்படுகிறது. ரயில்வே ஐங்ஷன் முதல், மதுரைசேலம் புறவழிச்சாலை (அம்மா சாலை) பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. பாப்புலர் முதலியார் வாய்க்கால் விரிவாக்கம் என்பது பொதுமக்களின், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. கிட்டத்தட்ட ஓராண்டு இரண்டு மாத காலமாக, இத்திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு கோடி ரூபாய் சொந்த நிதியில் செலவு செய்துள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குனர் கவிதா, கூட்டுறவு சங்கப்பிரதிநிதி கமலக்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X