சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலக்ட்ரீஷியன் கொலை: ஐவரிடம் விசாரணை

Added : டிச 20, 2020
Share
Advertisement
கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே நடந்த, எலக்ட்ரீஷியன் கொலை வழக்கு தொடர்பாக, ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், தென்னூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 26; இவர், கரூர் அருகே வேலாயுதம்பாளைம் முல்லை நகரில் தங்கி, எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 17 மாலை, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மூலிமங்கலம் பிரிவு பகுதியில்,

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே நடந்த, எலக்ட்ரீஷியன் கொலை வழக்கு தொடர்பாக, ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், தென்னூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 26; இவர், கரூர் அருகே வேலாயுதம்பாளைம் முல்லை நகரில் தங்கி, எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த, 17 மாலை, கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மூலிமங்கலம் பிரிவு பகுதியில், காபி கடை அருகே ரஞ்சித்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது, பஜாஜ் பல்சர் பைக்கில் வந்த மர்ம கும்பல், அரிவாளால் ரஞ்சித்குமாரை, வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த, வேலாயுதம்பாளையம் போலீசார், ஐந்து பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X