கரூர்: 'கரூர் அருகே குழாய் மற்றும் கேபிள் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்' என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-பசுபதிபாளையம் சாலை பழைய நீதி மன்றம் மற்றும் அண்ணாவளைவு பகுதியில், பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, பல முறை குழி தோண்டப்பட்டு சரி செய்யப்பட்டது. தற்போது, அந்த பகுதியில் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அண்ணாவளைவு பகுதியில் கடந்த மாதம் குழாய் மற்றும் கேபிள் சரி செய்யும் பணிக்காக, பள்ளம் தோண்டப்பட்டது. தற்போது, பணிகள் நிறைவு செய்யப்பட்ட நிலையில், பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக பசுபதிபாளையம், நெரூர், வாங்கல் மற்றும் நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதிகளுக்கு பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. குழி மூடப்படாததால், அண்ணா வளைவு பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மழை பெய்து வரும் நிலையில், பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, பணிகள் முடிந்தும் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ள பள்ளத்தை உடனடியாக மூட, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE