சாலையில் அபாய குழிகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

Added : டிச 20, 2020
Share
Advertisement
கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன.

கரூர்: கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் ஏற்பட்ட குழிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து, கரூர் வழியாக கோவை, ஊட்டி மற்றும் கேரளா மாநிலங்களுக்கு நாள்தோறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கரூரில் இருந்து கோவை செல்லும் சாலைகளில், பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர். இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள், அதிக பாதிப்புக்களாகின்றன. குறிப்பாக, க.பரமத்தியில் இருந்து தென்னிலை வரை உள்ள, அதிகப்படியான குழிகளை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சீரமைக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X