பொது செய்தி

தமிழ்நாடு

அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

Added : டிச 20, 2020
Share
Advertisement
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து கடனுதவிகளை வழங்கினார்.கெங்குவார்பட்டி அருகே கோட்டார்பட்டி, ஜெயமங்கலத்தில் அம்மா மினிகிளினிக்குகளை திறந்து வைத்து சிகிச்சையை துவக்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினார். பெரியகுளம்
 அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக கட்டடத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து கடனுதவிகளை வழங்கினார்.

கெங்குவார்பட்டி அருகே கோட்டார்பட்டி, ஜெயமங்கலத்தில் அம்மா மினிகிளினிக்குகளை திறந்து வைத்து சிகிச்சையை துவக்கி வைத்தார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கினார். பெரியகுளம் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் ரூ.46.80 லட்சம் மதிப்பீட்டில் விவசாயிகள் பயிற்சி மையம் மற்றும் கிட்டங்கி திறந்து வைத்தார். பயனாளிகளுக்கு நகரும் காய்கனி விற்பனை வண்டியை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் ப. ரவீந்திரநாத் எம்.பி., கம்பம் ஜக்கையன் எம்.எல்.ஏ., கலெக்டர் பல்லவிபல்தேவ், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ராஜபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் செல்லமுத்து, அன்னப்பிரகாஷ், கூட்டுறவு சங்க தலைவர் பாலசுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X