மூணாறு : கேரளா மூணாறு அருகே ஏலச்செடிகளை வெட்டி அழித்தவனத்துறையினரின் நடவடிக்கையை தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலையிட்டு தடுத்து நிறுத்தினார்.
மூணாறு அருகே கல்லார் பீச்சாடு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட ஏலச்செடிகளை மூணாறு டி.எப்.ஓ., கண்ணன், அடிமாலி வனச்சரகர் ஜோஜிஜான் தலைமையில் வனக்காவலர்கள் வெட்டி அழித்தனர்.அதற்கு எதிராக அப்பகுதியினர் வனத்துறையினரை முற்றுகையிட்டபோது கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மலயாற்றுார் வனத்திற்கு உட்பட பகுதியில் 15 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஏலச் செடிகளை வெட்டி அழித்து நிலத்தை கையகப்படுத்தப்போவதாக தெரிவித்தனர்.அங்கு சென்ற தேவிகுளம் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் அதிகாரிகளுடன் பேசினார். வனம் மற்றும் விளை நிலம் எல்லையை கண்டறியும் வரை நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு கூறியதை அதிகாரிகள் ஏற்று நடவடிக்கையை கைவிட்டனர்.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE