நான் போராளி கிடையாது: சென்னை தமிழச்சி பளிச்| Dinamalar

நான் போராளி கிடையாது: 'சென்னை தமிழச்சி' பளிச்

Added : டிச 20, 2020 | கருத்துகள் (2) | |
உலகத்தளத்தில் வைரஸூக்கும், சமூக வலை தளங்களில் 'வைரலாக' வீடியோக்களுக்கும் ஒருபோதும் பஞ்சமேயில்லை. 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வீடியோ வெளியிட்டதால் சர்ச்சையாகி பிரபலமானவர் 'சென்னை தமிழச்சி' பத்மபிரியா. தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தது சென்னை தமிழச்சி பற்றி...பத்மபிரியா எனது பெயர். தமிழ் ரொம்ப பிடிக்கும். பிறந்து, வளர்ந்தது சென்னை. புற்றுநோய்
நான் போராளி  கிடையாது: 'சென்னை தமிழச்சி' பளிச்

உலகத்தளத்தில் வைரஸூக்கும், சமூக வலை தளங்களில் 'வைரலாக' வீடியோக்களுக்கும் ஒருபோதும் பஞ்சமேயில்லை. 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020' வீடியோ வெளியிட்டதால் சர்ச்சையாகி பிரபலமானவர் 'சென்னை தமிழச்சி' பத்மபிரியா. தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்தது


சென்னை தமிழச்சி பற்றி...
பத்மபிரியா எனது பெயர். தமிழ் ரொம்ப பிடிக்கும். பிறந்து, வளர்ந்தது சென்னை. புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். எனது இன்ஸ்டாகிராம், யூ டியூப் பக்கத்திற்கு 'சென்னை தமிழச்சி'னு பேரு வச்சிருக்கேன்.நீங்க சமூக சேவகரா...
'சமூக சேவகர்'லாம் கிடையாது. அழகு குறிப்புகள், மூலிகைகள், பெண்கள், வாயில்லா ஜீவன்கள் பற்றி பேசி வீடியோவெளியிடுவேன். அதுக்காக என்னை போராளினு நெனச்சிராதீங்க...


இ.ஐ.ஏ., வைரல் வீடியோஒரு வரைவு அறிக்கையால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து படித்த போது எனக்குள் அச்சம் ஏற்பட்டது. பலருக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (இ.ஐ.ஏ) பற்றி தெரியவில்லை. 4 பேராவது தெரிந்து கொள்ளட்டும் என்று அந்த வீடியோவை வெளியிட்டேன். ஆனால், இப்படி வைரலாகும் என்று நினைக்கவில்லை.


மிரட்டல்கள் வந்ததாமிரட்டல்கள் என்று சொல்ல முடியாது. பணம் வாங்கி கொண்டு இ.ஐ.ஏ., பற்றிய வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ்ப் பெண்ணே கிடையாது; சீனாவில் இருந்து வந்தவர். தி.மு.க.,வின் கைக்கூலி என்றெல்லாம் சமூக வலை தளங்களில் எழுதினர். சிலரிடம் இருந்து ஆதரவு கருத்துக்களும் வந்தது.


வீட்ல என்ன சொன்னாங்க...'ஏன் உனக்கு வேண்டாத வேலை' என்றனர். என் மீது திணிக்கப்பட்ட பொய் பிரசாரங்களுக்கு எதிராக இரண்டாவது வீடியோ வெளியிட்டேன். கருத்து உரிமை எல்லோருக்கும் இருக்கு. ஒரு தவறை தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தவறில்லை.'மாடலிங்' பண்றீங்களா...முழு நேர மாடலிங்கில் ஈடுபடவில்லை. எனக்கு பிடிச்சா... அப்பப்போ பண்ணுவேன். பொழுது போகலைனா 'டிக் டாக்' பண்ணுவேன். இப்போ தடை பண்ணிட்டாங்க. ஒரு 'செயலி'யால் ஆபத்து இருந்தால் தடை செய்வதில் தப்பில்லை.சினிமா வாய்ப்பு...நடிப்பில் ஆர்வம் உண்டு. நடிகர் கமலை ரொம்ப பிடிக்கும். டிவி., சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் வருது. ஆனா நான் தான் ஓ.கே., சொல்லல. இப்போ வேணாம்... பின்னால பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.


பெண்களுக்கு எதிரான குற்றங்கள்எங்கயோ ஒரு மூலையில் தினமும் நடந்துட்டு தான் இருக்கு. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் எவ்வளவோ மேல். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தான்.
உங்க ஆசைகள்


எல்லோர் மாதிரியும் சாதாரண பொண்ணா இருக்க விரும்புறேன். மூலிகை குளியல் பொடி, ஹேர் கேர் மாஸ்க் போன்ற ஹெர்பல் பொருட்களை தயாரித்து விற்கிறேன். தினமும் 22 தெருநாய்களுக்கு உணவு வழங்குகிறேன். 22 மரங்களை நட்டு வளர்க்கிறேன். இதை விட வேற என்ன வேணும் சொல்லுங்க.

சிவன்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X