லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75% செயலிழப்பு

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
பாட்னா: பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் நிறுவனரும், பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் , 2017-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக
LaluPrasadYadav, KidneyFunction, Worsen, லாலு பிரசாத் யாதவ், கிட்னி, சிறுநீரகம், செயலிழப்பு

பாட்னா: பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் நிறுவனரும், பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் , 2017-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறுநீரகப் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் லாலு பிரசாத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது சிறுநீரகம் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது லாலுவின் சிறுநீரகம் 25 சதவீதம் மட்டுமே செயல்படுவதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக ரிம்ஸ் மருத்துவக் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதனால், லாலு பிரசாத்தைக் காண அவரது மகனான தேஜஸ்வி நேரில் விரைந்துள்ளார்.


latest tamil news
சமீபத்தில் பீஹாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆகிய இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக உருவானது குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்குப் பிறகு தற்போதுதான் தேஜஸ்வி, தனது தந்தை லாலு பிரசாத்தை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-டிச-202021:40:04 IST Report Abuse
Bhaskaran மக்களுக்கு நன்மைசெய்யணும்னா உடனே கையெழுத்து போட்டுவிடுவாராம் .அவரை ஏமாற்றி சாப்பிட்டது அதிகாரவர்க்கம்னு ஒரு ஐ.எ .எஸ் அதிகாரி ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதியிருந்தார் உண்மையோ பொய்யோ தெரியாது ஆனாலும் ணாமூர் ஆசாமிகள் மாதிரி கொள்ளையடிக்கமுடியாது
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
20-டிச-202021:37:11 IST Report Abuse
Rajagopal எவ்வளவு பணம் சம்பாத்தித்து என்ன பயன்? எல்லா மனிதர்களுக்கும் என்ஜின் ஒரு நாள் பழுதடைந்து நின்று போகும் காலம் வரும். எதையும் வாங்கும் இதயம் இப்போது மெரீனா கடற்கரையில் உறங்கிக்கொண்டிருக்கிறது.
Rate this:
Cancel
20-டிச-202021:15:48 IST Report Abuse
சம்பத் குமார் 1). மனித நேயம் வளரட்டும்.2). சீக்கிரம் குணம் அடைய வாழ்த்துக்கள். 3)வயது முதிர்ந்தால் எல்லோருக்கும் நோய் வரும். எல்லோரும் ஒரு நாள் வயது முதிர்ச்சி பெறுவது உறுதி.4). Karma never Fails என்பதை மனதில் கொள்ள வேண்டும் அதற்கேற்ப வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.நன்றி ஜயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X