அதிருப்தி தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு காங்கிரஸில் சீர்திருத்தம்

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: காங்., தலைமை மீது அதிருப்தியில் இருந்த தலைவர்களை நேற்று சோனியா சந்தித்து ஆலோசித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.காங்., இடைக்கால தலைவராக, சோனியா உள்ளார். முழு நேர தலைமை, உள்கட்சித் தேர்தல் ஆகிய கோரிக்கைகள் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் சோனியா குடும்பத்திற்கும்,
Congress, Leaders, Reshuffle,  FourStates, காங்கிரஸ், தலைவர்கள், சீர்திருத்தங்கள்

புதுடில்லி: காங்., தலைமை மீது அதிருப்தியில் இருந்த தலைவர்களை நேற்று சோனியா சந்தித்து ஆலோசித்தார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநில தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

காங்., இடைக்கால தலைவராக, சோனியா உள்ளார். முழு நேர தலைமை, உள்கட்சித் தேர்தல் ஆகிய கோரிக்கைகள் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர். இதனால் சோனியா குடும்பத்திற்கும், அத்தலைவர்களுக்கும் இடையே அதிருப்தி ஏற்பட்டது. அவர்களை நேற்று சந்தித்து சோனியா ஆலோசனை நடத்தினார். உடன் ராகுல், பிரியங்கா ஆகியோரும் இருந்தனர். தொடர் கூட்டங்களும் நடக்க இருக்கின்றன. நீண்ட நாட்களாக நீடித்த உட்கட்சி முரண்பாடுகளுக்கு ஒரு முடிவு காண உள்ளனர்.


latest tamil news


சனிக்கிழமை நடந்த கூட்டத்தில், “முழு விருப்பத்துடன் கட்சிக்காக பணியாற்ற தயாராக இருக்கிறேன்.” என ராகுல் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் கட்சித் தலைமை பொறுப்புக்கு வருவார் என தெரிகிறது.

காங்., செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா 99.9% தொண்டர்கள் ராகுல் தலைவராக விரும்புவதாக கூறினார்.

இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் உத்தம்குமார் ரெட்டி உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகியுள்ளார். குஜராத் காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தாவும் ராஜினாமா செய்துள்ளார். இடைத்தேர்தல்களில் கட்சி படுதோல்வி அடைந்ததால் பதவி விலகினார். மும்பை காங்கிரஸ் கமிட்டியிலும் மாற்றங்களை செய்துள்ளது.

மேலும் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் அசாம் மற்றும் கேரளாவிற்கு 3 தேசிய செயலாளர்களை சோனியா நியமித்துள்ளார். இவர்கள் அம்மாநில செயலாளர்களுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-டிச-202007:32:03 IST Report Abuse
Bhaskaran ராமேஸ்வரத்தில் அழகிரியார் அந்த புனிதமான காரியத்தை செய்து காங்கிரசை கடைதேற்றுவார்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-டிச-202003:49:43 IST Report Abuse
J.V. Iyer அதிருப்தி தலைவர்களுடனான சந்திப்புக்கு பிறகு மீண்டும் தலைமை ஏற்பார் ராகுல்ஜி அவர்கள். வருக பாப்பு. வெட்கப்படவேண்டாம்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
20-டிச-202021:49:29 IST Report Abuse
bal சீர்திருத்தம்னா...குடும்பத்தில் இல்லாதவர் தலைவரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X