கோவை: தமிழகத்தில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஜனநாயக கூட்டணியில் அமையும் கூட்டணியில் பலமான கட்சிதான் தலைமை ஏற்கும். எது பலமான கட்சி என்பது உங்களுக்கே தெரியும் என்று கோவையில் பா.ஜ., மாநில துணைதலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., பழங்குடி அணி செயற்குழு கூட்டம் கொடிசியா அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பா.ஜ., மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:பழங்குடி மக்களுக்கு முன்னேற்றத்திற்கான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்திருக்கிறார். தமிழக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை . முதல்வர் வேட்பாளர் முடிவை தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்று மாநில தலைவர் முருகன் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. பா.ஜ., தேசிய தலைமை தொடர்ந்து பிஸியாக இருப்பதால் , இந்த விவகாரங்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாநில தலைவர் முருகன் சொன்ன கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. புகழேந்தி உள்ளிட்ட அ.தி.மு.க., நண்பர்கள் பார்த்து பேச வேண்டும்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ. மாநில தலைமை எந்த குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. பா.ஜ.,வின் முக்கிய முடிவுகளை தேசிய தலைமைதான் அறிவிக்கும் என்பதை தான் முருகன் சொல்லி இருந்தார். அ.தி.மு.க., நண்பர்கள் இதை புரிந்து பேச வேண்டும்.பா.ஜ.,தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகம் வரும் போது அனைத்து குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகத்தில் பா.ஜ., தே.ஜ.,கூட்டணியிலேயே இருக்கிறது. தமிழக முதல்வர் மீது எப்போதும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை
.அமித்ஷா சென்னை வந்த போது மேடையில் அ.தி.மு.க., தலைவர்கள் கூட்டணி அறிவித்த போது கூட அமித்ஷா அமைச்சராக இருந்ததால் தான் கூட்டணி குறித்து பேசவில்லை. கூட்டணி குறித்து கட்சி தலைமையே முடிவு எடுக்கும்.தமிழகத்தில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஜனநாயக கூட்டணியில் அமையும். பலமான கட்சிதான் தலைமை ஏற்கும். எது பலமான கட்சி என்பது உங்களுக்கே தெரியும் என்றார். நிருபர் சந்திப்புக்கு பின்னர் வெளியில் வந்த அண்ணாமலை பழங்குடி மக்களுடன் இணைந்து நடனம் ஆடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE