அறிவியல் ஆயிரம்
மீண்டும் வெற்றி கிடைக்குமா
சீனாவின் 'சாங்கி - 5' விண்கலம் சமீபத்தில் நிலவில் இருந்து பாறை மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இந்த வெற்றியை தொடர்ந்து இதே போன்று செவ்வாய் கோளில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை தயாரித்துள்ளது. வரும் 2030க்குள் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீன விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கோளில் இருந்து மண், பாறை துகள் மாதிரியை பூமிக்கு கொண்டு வரும் பணியில் அமெரிக்காவின் நாசா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி மையங்கள் ஈடுபட்டுள்ளன.
தகவல் சுரங்கம்
அறிவியல் விருது
உயிரியல், வேதியியல், இன்ஜினியரிங், கணிதம், மருத்துவம், இயற்பியல் துறையில் சிறந்து விளங்கு பவர்களுக்கு சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது வழங்கப் படுகிறது. இது சி.எஸ்.ஐ.ஆர்., எனும் அறிவியல் தொழில் வளர்ச்சிக்கழகம் இவ்விருதை 1958ம் ஆண்டு வழங்குகிறது. இந்த அமைப்பை நிறுவிய சாந்தி ஸ்வரூப் பட்னாகர் பெயரில் வழங்கப்படுகிறது. அறிவியல் தொழில்நுட்ப ஆய்வில் ஈடுபடும் 45 வயதுக்குட்பட்ட இந்தியர்கள் இவ்விருதுக்கு தகுதியானவர்கள்.விருதுடன் 5 லட்சம் ரூபாயும், 65 வயது வரை மாதம் ரூ.15 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE