பொது செய்தி

இந்தியா

அனுமதியின்றி வெளிநாட்டு நிதி: பஞ்சாப் விவசாய சங்கம் மீது குற்றச்சாட்டு!

Updated : டிச 20, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புது டில்லி: டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கம், முறையான அனுமதியின்றி வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்குகிறது. டில்லியின் எல்லையில் பல்வேறு விவசாய

புது டில்லி: டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ள பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கம், முறையான அனுமதியின்றி வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



latest tamil news



மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதத்தை நெருங்குகிறது. டில்லியின் எல்லையில் பல்வேறு விவசாய சங்கங்கள் இப்போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர். அவற்றில் பஞ்சாபின் மிகப்பெரிய விவசாய சங்கமான பாரதிய கிசான் சங்கம் (உக்ரஹான்) ஒன்று. இச்சங்கம் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு நிதிகளை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சங்கத்தின் பொதுச் செயலாளரை பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி அதிகாரிகள் அழைத்து உள்ளனர். அந்நிய செலாவணி துறை, வெளிநாட்டு நிதி பெற்றது குறித்து கடிதம் அனுப்பியதாக கூறியுள்ளனர். இச்சங்கத்திற்கு கடந்த இரண்டு மாதங்களில் ரூ.9 லட்சம் வரை நிதி கிடைத்துள்ளது. “இது வெளிநாடுகளில் வசிக்கும் பஞ்சாபியர்களிடமிருந்து அனுப்பப்படுகிறது. சமூக பிரச்னைகளுக்காக அவர்கள் தொடர்ந்து நன்கொடை வழங்குகிறார்கள்.” என சங்கத்தின் செயலாளர் சுக்தேவ் சிங் கூறினார்.


latest tamil news



இது பற்றி பேசிய பாரதிய கிசான் சங்க தலைவர் ஜோகிந்தர் உக்ரஹான், “நாங்கள் கமிஷன் ஏஜென்ட்களிடமிருந்து உதவி பெறவில்லை. எங்களுக்கு நிதி அனுப்புபவர்கள் பஞ்சாபியர்கள் போன்ற என்.ஆர்.ஐ.,க்கள். அதில் என்ன பிரச்சினை. இது அவர்களுடைய போராட்டமும் கூட.” என்றார்.
டில்லி விவசாயிகள் போராட்டத்தினை கொள்முதல் ஏஜென்ட்கள் தீவிரமாக ஆதரவளித்து வருகின்றனர். இதனால் பஞ்சாபின் முக்கியமான ஏஜென்ட்களின் இடங்களில் சில நாட்களுக்கு முன் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-டிச-202009:14:35 IST Report Abuse
சம்பத் குமார் Even though if central government wants to contribute all food, shelters, water and medical facilities to the farmers but federation dont need it.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-டிச-202003:48:15 IST Report Abuse
J.V. Iyer காலிஸ்தான், பாகிஸ்தான் போன்ற பிரிவினை வாதிகள் நாட்டை சூறையாட காத்திருக்கின்றனர். இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.
Rate this:
Cancel
21-டிச-202001:42:09 IST Report Abuse
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) இந்துமத விரோதி சுடலை கானும் இந்த தேசத்துரோக கும்பலுக்கு நிதியுதவி செய்திருப்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X