பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : டிச 20, 2020
Share
Advertisement
வெள்ளாடு பராமரிக்க ஆலோசனைஉத்திரமேரூர்: கால்நடை பராமரிப்பு துறை சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி மற்றும் ஒரங்காட்டுப்பேட்டை ஊராட்சிகளில், விலையில்லா வெள்ளாடுகள் வழங்க, 28 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்பயனாளிகளுக்கு ஓரிரு தினங்களில், வெள்ளாடு வழங்கப்பட உள்ளது.இதையொட்டி, ஆடுகளை பராமரிப்பது குறித்த ஆலோசனை, அரும்புலியூர் கால்நடை மருந்தகம் சார்பில்,

வெள்ளாடு பராமரிக்க ஆலோசனைஉத்திரமேரூர்: கால்நடை பராமரிப்பு துறை சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி மற்றும் ஒரங்காட்டுப்பேட்டை ஊராட்சிகளில், விலையில்லா வெள்ளாடுகள் வழங்க, 28 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இப்பயனாளிகளுக்கு ஓரிரு தினங்களில், வெள்ளாடு வழங்கப்பட உள்ளது.இதையொட்டி, ஆடுகளை பராமரிப்பது குறித்த ஆலோசனை, அரும்புலியூர் கால்நடை மருந்தகம் சார்பில், நேற்று முன்தினம் நடந்தது.

ஏனாத்துார் உழவர் உற்பத்தி மைய ஆலோசகர் கோபி, வெள்ளாடுகள் பராமரிக்கும் முறை குறித்து விளக்கினார்.சிறுமயிலுார் மற்றும் அரும்புலியூர் கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர்கள், ஆடுகளுக்கு நோய்கள் தாக்காமல் பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தனர். தமிழில் பூஜை செய்ய விழிப்புணர்வுகாஞ்சிபுரம்: சென்னையைச் சேர்ந்த இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர், நேற்று முன்தினம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன், ஆதிபீட பரமமேஸ்வரி, வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்கு, நேற்று முன்தினம் சென்றனர்.

கோவில் நுழைவாயிலில், தமிழில் பூஜை செய்வது குறித்து தமிழில் மந்திரங்கள் ஓதி, பக்தர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வரும் சட்டசபை தேர்தலில், தமிழை கருவறை பூஜை மொழியாக்க உறுதியளிக்கும் கட்சிக்கு மட்டுமே, தமிழர்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.வெள்ளாடு பராமரிக்க ஆலோசனை உத்திரமேரூர் - கால்நடை பராமரிப்பு துறை சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி மற்றும் ஒரங்காட்டுப்பேட்டை ஊராட்சிகளில், விலையில்லா வெள்ளாடுகள் வழங்க, 28 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இப்பயனாளிகளுக்கு ஓரிரு தினங்களில், வெள்ளாடு வழங்கப்பட உள்ளது.இதையொட்டி, ஆடுகளை பராமரிப்பது குறித்த ஆலோசனை, அரும்புலியூர் கால்நடை மருந்தகம் சார்பில், நேற்று முன்தினம் நடந்தது.ஏனாத்துார் உழவர் உற்பத்தி மைய ஆலோசகர் கோபி, வெள்ளாடுகள் பராமரிக்கும் முறை குறித்து விளக்கினார்.சிறுமயிலுார் மற்றும் அரும்புலியூர் கால்நடை மருந்தக கால்நடை மருத்துவர்கள், ஆடுகளுக்கு நோய்கள் தாக்காமல் பாதுகாப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.தமிழில் பூசை செய்ய விழிப்புணர்வுகாஞ்சிபுரம் - சென்னையைச் சேர்ந்த இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர், நேற்று முன்தினம், காஞ்சிபுரம் காமாட்சியம்மன், ஆதிபீட பரமமேஸ்வரி, வரதராஜ பெருமாள், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களுக்கு, நேற்று முன்தினம் சென்றனர்.கோவில் நுழைவாயிலில், தமிழில் பூசை செய்வது குறித்து தமிழில் மந்திரங்கள் ஓதி, பக்தர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வரும் சட்டசபை தேர்தலில், தமிழை கருவறை பூசை மொழியாக்க உறுதியளிக்கும் கட்சிக்கு மட்டுமே, தமிழர்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் என, தெரிவித்தனர்.'அம்மா மினி கிளினிக்' துவக்கம்உத்திரமேரூர் - ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத மற்றும் ஏழை, எளியோர் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில், தமிழத்தில், 2,000 மினி கிளினிக் துவங்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.இதில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 26 மினி கிளினிக்குகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டு, முதற்கட்டமாக நேற்று முன்தினம், மூன்று மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டன.இரண்டாம் கட்டமாக, உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் மற்றும் கம்மாளம்பூண்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அ.தி.மு.க., செயலர் சோமசுந்தரம், அம்மா மினி கிளினிக்கை, நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X