காஞ்சிபுரம் : பனங்கிழங்கு சீசன் துவங்கியுள்ளதை தொடர்ந்து, அவித்த ஐந்து கிழங்குகள், 20 ரூபாய்க்கு, காஞ்சிபுரத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளிலும், காஞ்சியை ஒட்டியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களிலும், பனங்கிழங்கு அறுவடை சீசன் துவங்கியுள்ளது.இதனால், காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில், தலைச்சுமை வியாபாரிகள், நடைபாதை, இருசக்கர வாகனங்களில், பனங்கிழங்கு விற்பனை துவங்கியுள்ளது.கடந்த ஆண்டு, அவித்த ஆறு கிழங்குகள் அடங்கிய ஒரு கட்டு, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நடப்பாண்டு, போதுமான விளைச்சல் இல்லாததால், நடைபாதை வியாபாரிகள், ஐந்து கிழங்குகள், 20 ரூபாய்க்கு விற்பனை செய்கினறனர்.
தெரு தெருவாக கூடையை சுமந்து செல்லும், தலைச்சுமை மற்றும் இருசக்கர வாகனங் சென்று விற்பனை செய்வோர், நான்கு கிழங்குகள், 20 ரூபாய்கு விற்பனை செய்கின்றனர். தை மாதம் இறுதி வரை சீசன் இருக்கும் என, பனங்கிழங்கு வியாபாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE