திண்டிவனம் : பெரியதச்சூரில் தீ விபத்தில் கோழிப்பண்ணை எரிந்த பகுதியை எம்.எல்.ஏ., மாசிலாமணி பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூறினார்.
மயிலம் ஒன்றியம் பெரிய தச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஜெய்சங்கர் என்பவரின் கோழிப் பண்ணை மின் கசிவு காரணமாக நேற்று முன் தினம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இதில், ஏராளமான கோழிகள் இறந்தனஇது குறித்து தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., மாசிலாமணி, நேரில் சென்று தீ விபத்தில் சேதமடைந்த கோழிப்பண்ணையை பார்வையிட்டு, உரிமையாளருக்கு ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில், வழக்கறிஞர் அருணகிரி, பாலு, குமார், தணிகாசலம், சுப்ரமணி, பாஸ்கர் மற்றும் திமுக., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE