பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் இல்லை

Added : டிச 20, 2020
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார் : அடிப்படை வசதிகள் இல்லாததால், சுங்குவார்சத்திரம் மக்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம், மொளச்சூர், சந்தவேலுார் ஆகிய மூன்று ஊராட்சிகளின் எல்லையில், சுங்குவார்சத்திரம் உள்ளது.சுங்குவார்சத்திரத்தில் தொழிற்சாலைகள், 1,000க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. இங்குள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட

ஸ்ரீபெரும்புதுார் : அடிப்படை வசதிகள் இல்லாததால், சுங்குவார்சத்திரம் மக்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், திருமங்கலம், மொளச்சூர், சந்தவேலுார் ஆகிய மூன்று ஊராட்சிகளின் எல்லையில், சுங்குவார்சத்திரம் உள்ளது.சுங்குவார்சத்திரத்தில் தொழிற்சாலைகள், 1,000க்கும் மேற்பட்ட வணிக கடைகள் உள்ளன. இங்குள்ள பஸ் நிலையத்தை பயன்படுத்தி, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காஞ்சிபுரம், திருவள்ளூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.இப்பகுதியில், வடிகால்வாய், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பல ஆண்டுகளாக, பொதுமக்கள், வியாபாரிகள், பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவதுசுங்குவார்சத்திரத்தில், சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. குப்பை அகற்றப்படுவதே இல்லை. கழிப்பறை இல்லாததால், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பஸ் நிறுத்தம் அருகே, கழிவு நீர் குட்டையாக மாறிய கோவில் குளம் நிரம்பி, தண்ணீர் சாலையில் செல்கிறது.சுங்குவார்சத்திரத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வலியுறுத்தி, ஸ்ரீபெரும்புதுார் எம்.எல்.ஏ., - எம்.பி., மாவட்ட கலெக்டருக்கு, பல முறை புகார் மனு அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X