மேற்கு வங்கத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: பிரசாரத்தில் அமித்ஷா நம்பிக்கை

Updated : டிச 22, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
போல்பூர்:''மேற்கு வங்கத்தில் நிலவி வரும் அரசியல் வன்முறை, கடத்தல், ஊழல் மற்றும் வங்க தேசத்தினரின் ஊடுருவலால், மம்தா ஆட்சி மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ்
மேற்கு வங்கம், ஆட்சி மாற்றம், அமித்ஷா, நம்பிக்கை, பாஜ, திரிணமுல்,

போல்பூர்:''மேற்கு வங்கத்தில் நிலவி வரும் அரசியல் வன்முறை, கடத்தல், ஊழல் மற்றும் வங்க தேசத்தினரின் ஊடுருவலால், மம்தா ஆட்சி மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, மாநிலத்தில் அரசியல் மாற்றத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநில சட்டசபை தேர்தல், சில மாதங்களில் நடைபெற உள்ளது. மம்தா ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, பா.ஜ., தீவிர பிரசாரத்தை துவக்கி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக, மேற்கு வங்கம் சென்றுள்ளார்.

இரண்டாம் நாளாக, பிர்பும் மாவட்டத்தில் உள்ள, சாந்தி நிகேதன் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள, விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்கு, அமித் ஷா சென்றார். பல்கலை துணை வேந்தர் வித்யுத் சக்கரவர்த்தி மற்றும் பேராசிரியர்களை சந்தித்து பேசினார்.பல்கலை வளாகத்தில் உள்ள, ரவீந்திரநாத் தாகூரின் நினைவிடத்தில், மலர் அஞ்சலி செலுத்தினார். ரவீந்திரநாத் தாகூர் குறித்து, மாணவர்கள் நிகழ்த்திய பக்திப் பாடல்கள் நிகழ்வில் அவர் பங்கேற்றார்.

பின், மேற்கு வங்கத்தை சேர்ந்த, கிராமிய இசை கலைஞர், பாசுதேப் தாஸ் பவுல் வீட்டுக்குச் சென்று, அவருடன் மதிய உணவு சாப்பிட்டார்.அவருக்கு, மேற்கு வங்கத்தின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன. அவருடன், பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ், பொது செயலர் கைலாஷ் விஜய்வர்கியா, மூத்த தலைவர்கள் முகுல் ராய், ராகுல் சின்ஹா மற்றும் அனுபம் ஹஸ்ரா ஆகியோர் சென்றனர்.பாசுதேப் தாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் இசை நிகழ்ச்சி நடத்தினர். அவர்கள் பாடிய, பிரபல வங்காள மொழி கிராமிய பாடல்களை, அமித் ஷா கேட்டு ரசித்தார்.

இதைத் தொடர்ந்து, பிர்பும் மாவட்டம் போல்பூரில் உள்ள, டக் பங்களா மைதானத்தில் துவங்கி, சவுரஷ்டா மூர் வரை நடந்த, பிரமாண்ட பேரணியில் பங்கேற்றார்.அலங்கரிக்கப்பட்ட வாகனத்தின் மேல் நின்றபடி வந்த அமித் ஷாவை காண, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். 'ஜெய்ஸ்ரீராம், பிரதமர் மோடி வாழ்க, அமித் ஷா வாழ்க' என்ற கோஷங்களை எழுப்பினர்.

ஊர்வலத்தின் இறுதியில், அமித் ஷா பேசியதாவது:இது போன்ற எத்தனையோ ஊர்வலங்களில், பங்கேற்றுள்ளேன். ஆனால், இது போன்ற ஓர் ஊர்வலத்தை, என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. மம்தா அரசின் மீது, மக்களுக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடாக தான், ஆயிரக்கணக்கானோர் இங்கு திரண்டுள்ளீர்கள். நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி திட்டங்கள் மீது, மேற்கு வங்க மக்கள் வைத்துள்ள நம்பிகையை, இந்த கூட்டம் உணர்த்துகிறது.

மாநிலத்தில் நிலவிவரும் அரசியல் வன்முறை, கடத்தல், ஊழல் மற்றும் வங்க தேசத்தினரின் ஊடுருவலால், மம்தா ஆட்சி மீது, மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். விரைவில் ஆட்சி மாற்றம் வேண்டும் என, மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், 'தங்க வங்கம்' என்ற பழைய பெருமையை, மேற்கு வங்கம் திரும்ப பெறும்.ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்க தேசத்தினர் ஊடுருவலை தடுத்து நிறுத்தாமல், மம்தா வேடிக்கை பார்க்கிறார். பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை, வெளி மாநிலத்துக்காரர் என, மம்தா விமர்சிக்கிறார்.

மம்தா காங்கிரசில் இருந்தபோது, முன்னாள் பிரதமர் இந்திரா மேற்கு வங்கத்துக்கு வந்தார். அப்போது அவரை, வெளி மாநிலத்துக்காரர் என, மம்தா விமர்சித்தாரா... நட்டா உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்; இதற்கு மம்தா பதில் சொல்லியே தீர வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


திரிணமுல் காங்கிரஸ் பதில்


மேற்கு வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சி குறித்து, அமித் ஷா வைத்த குற்றச்சாட்டுகளுக்கு, திரிணமுல் காங்., - எம்.பி., டெரக் ஓ பிரையன் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:வேறு கட்சியில் இணைவதற்காக, காங்கிரஸ் கட்சியை விட்டு, மம்தா வெளியேறவில்லை. அவர், 1998ல், திரிணமுல் காங்., கட்சியை துவங்கு வதற்காகவே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். தற்போது திரிணமுல் காங்.,கில் இருந்து விலகுபவர்கள், கட்சிக்கு சுமையாக தான் இருந்தனர். அவர்கள் விலகுவதில் எங்களுக்கு கவலையில்லை.பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, 'இஸட் பிளஸ்' பாதுகாப்பை மாநில அரசு வழங்கியது. ஆனால், அவர் பாதுகாப்பு விதிமுறைகளை மதிக்காமல், ஏராளமான கார்களை, தன் காருடன் அணிவகுத்து வர அனுமதித்ததே, அன்றை தாக்குதலுக்கு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மேற்கு வங்க, ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றிய, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு, கண்டனம் தெரிவித்த, பஞ்சாப், டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களுக்கும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும், மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளர்.


'வெளியேறுபவர்களால் பாதிப்பில்லை'

திரிணமுல் காங்.,கை சேர்ந்த, பஞ்சாயத்து அமைச்சர் சுப்ரதா முகர்ஜி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:சுவேந்து அதிகாரி, பா.ஜ.,வினருடன் தொடர்பில் உள்ளார் என்பது, கட்சி தலைமைக்கு நீண்ட நாட்களாகவே தெரியும். அதனால்,அவர் கட்சியில் இருந்து வெளியேறியது எங்களுக்கு அதிர்ச்சியாக இல்லை. அதிருப்தியாளர்கள் வெளியேறுவதால் திரிணமுல் காங்.,குக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
22-டிச-202000:17:08 IST Report Abuse
Easwar Kamal ஹெலோ அமித் உள்துறை அமைச்சரே அங்கு தில்லியில் உழவர் போராட்டம் நடக்குது அங்கே இருக்கமா bengal என்ன வேலை. மக்களுக்கு தெரியும் யாரை தேர்ந்து எடுக்கணுமுன்னு. நீங்க தான் எலக்ஷன் commission பை குள்ள வச்சு இருக்கீங்களே அப்புறம் எதுக்கு இந்த ஸ்டண்ட். போய் அந்த போராட்டத்தை கவனீங்கயா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-டிச-202021:50:33 IST Report Abuse
sankaseshan மேற்கு வங்கத்தில் சொரியார் பொறக்கணுமா சொல்லுவது கும்டாரேன்சாமி ஏற்கனவே நாசமான வங்கத்தில் சொரியானும் பொறக்கணுமா ? கிழிஞ்சது போ .
Rate this:
Cancel
21-டிச-202012:34:17 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு முதலில் டெல்லி 63 மட்டுமே உள்ள டெல்லி அங்கே முதலில் வெற்றி பெரு இரண்டு முறை ஒருத்தன் ஓட ஓட விரட்டினானான் இன்னும் என்ன அப்புறம் WB பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X