மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பேரூராட்சியின் பயணியர் விடுதி, வணிக வளாகம் இடியும் ஆபத்துடன், சீரழிந்துள்ளது.
மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம் நிர்வகிக்கும், பயணியர் விடுதி, வணிக வளாகம் இயங்குகிறதுகடந்த, 1987ல் அமைக்கப்பட்ட இந்த வளாகத்தில், தரைதளத்தில், 11 கடைகள், மேல்தளத்தில், 11 அறைகளுடன் விடுதி உள்ளன. இதே வளாகத்தில், செயல் அலுவலர் குடியிருப்பும் உண்டு.விடுதி, கடைகளை, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏலம் விட்டு, ஆண்டுதோறும், ஐந்து சதவீத வாடகை உயர்வு அடிப்படையில், ஒப்பந்தம் பெறப்பட்டு, தனியாரிடம் வழங்கப்படும்.
முறையான பராமரிப்பு இல்லாததால், வளாகத்தின் சுவர், மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, கம்பிகள் துருப்பிடித்து, இடியும் ஆபத்தில் உள்ளது. நீண்டகாலம் ஏலம் விடவில்லை. மாத வாடகையும் வசூலிப்பதில்லை.ஓராண்டுக்கு முன், பிரதமர் மோடி - சீன அதிபர் ஸீ ஜின்பிங் சந்திப்பின்போது, இவ்வூர் பராமரிப்பு கருதி, சுவரில் வண்ணம் அடிக்கப்பட்டது.இதை இடித்து, புதிதாக அமைக்க, 2015ல் தீர்மானம் நிறைவேற்றியும், தற்போது வரை இடிக்காமல், ஆபத்துடன் உள்ளது.வர்த்தக பகுதியில் உள்ள கட்டடத்தை இடித்து, பேரூராட்சிக்கு வருவாய் அளிக்கும் வகையில், புதிய வணிக வளாகம் அமைக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE