பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் ஓ.பி.ஆர்., படம் திறப்பு

Added : டிச 20, 2020
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் ரெட்டி நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. திண்டிவனம் மயிலம் ரோட்டிலுள்ள சுலோச்சனா திருமண நிலையத்தில், தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் சார்பில் மரக்காணம், வானுார் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை நடந்தது.விழுப்புரம் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் ரமணன்

திண்டிவனம் : திண்டிவனத்தில் ரெட்டி நலச்சங்கத்தின் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

திண்டிவனம் மயிலம் ரோட்டிலுள்ள சுலோச்சனா திருமண நிலையத்தில், தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் சார்பில் மரக்காணம், வானுார் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை நடந்தது.விழுப்புரம் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் ரமணன் முன்னிலை வகித்தார். தென்னிந்திய ரெட்டி சங்கத்தின் தலைவர் முத்துமல்லா சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில்,சங்கத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜெயரபிரகாஷ், மாவட்ட செயலாளர் சீத்தாபதி, பொருளாளர் ரவிச்சந்திரன், துணை தலைவர் தருமசிவம்,நிர்வாகிகள் சிதம்பரநாதன், குமார், துரைராஜ், ராமகிருஷ்ணன், ஜோதிசுப்பரமணியம், பாலசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பி.ஆர்.படத்தை திறப்பதற்கு ஆவண செய்த முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X