பொது செய்தி

தமிழ்நாடு

மனைகளை வரன்முறைப்படுத்த ஒருங்கிணைப்பாளர் தகவல்

Added : டிச 20, 2020
Share
Advertisement
விழுப்புரம் : தமிழகம் முழுவதும் ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் செலுத்தாத அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்திக்கொள்ள தற்போது புதிதாக விண்ணப்பிக்க முடியும். அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலுார் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை;வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சி துறை மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்க

விழுப்புரம் : தமிழகம் முழுவதும் ஆன்லைன் விண்ணப்ப கட்டணம் செலுத்தாத அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்திக்கொள்ள தற்போது புதிதாக விண்ணப்பிக்க முடியும்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கடலுார் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை;வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சி துறை மூலம் தமிழகம் முழுவதும் விண்ணப்பிக்க முடியும் என்றாலும் குறிப்பாக கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 20.-10.2016-ம் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறை படுத்திக்கொள்ள இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.இதில், வரைமுறைப்படுத்த விண்ணப்பிக்க தவறிய மனைகளும், மனைப்பிரிவுகளும் ஏராளம் இருக்கின்றது.

இவைகளை வரைமுறைப்படுத்த தமிழக துணை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.எனவே, கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்கள் பலரையும் உள்ளடக்கிய அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக மனுக்களை பெற்று ஒருங்கிணைத்து நகர் ஊரமைப்பு துறையிடம் தொகுப்பாக வழங்க முடிவெடுத்துள்ளோம்.கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அனுமதியற்ற மனைப் பிரிவுகள் மற்றும் இந்த மனைப் பிரிவுகளில் உள்ள மனைகளை வரன்முறை படுத்திக் கொள்ளும் புதிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள நகர்புற அமைப்பு அலுவலகத்திலோ அல்லது 9710405555, 9361118375 அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் வாட்ஸ்அப் எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை தந்து விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X