பொது செய்தி

இந்தியா

கடும் குளிரிலும் தொடரும் போராட்டம்: உயிரிழந்தோருக்கு விவசாயிகள் அஞ்சலி

Updated : டிச 22, 2020 | Added : டிச 20, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி:இந்த குளிர்காலத்தில், மிகவும் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், டில்லி எல்லையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. போராட்ட காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், தொடர்ந்து, 24 நாட்களாக போராடி வருகின்றனர். பல சுற்று
கடும்குளிர், விவசாயிகள், போராட்டம், உயிரிழந்தோர், டில்லி

புதுடில்லி:இந்த குளிர்காலத்தில், மிகவும் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ள நிலையில், டில்லி எல்லையில், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. போராட்ட காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, பஞ்சாப் விவசாயிகள், டில்லி எல்லையில், தொடர்ந்து, 24 நாட்களாக போராடி வருகின்றனர். பல சுற்று பேச்சு நடத்தியும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.


நம்பிக்கைடில்லியில், நேற்று காலை நிலவரப்படி, வெப்பநிலை, 3.4 டிகிரி செல்ஷியசாக இருந்தது. இந்த குளிர்காலத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை இது.கடும் குளிர் நிலவினாலும், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட காலத்தின்போது, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.

இந்த நிலையில், பஞ்சாபில் இருந்து மருத்துவக் குழுவினர், டில்லி எல்லைக்கு வந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய விவசாய அமைச்சர், நரேந்திர சிங் தோமரை, ஹரியானா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மனோகர் லால் கட்டார், நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். ''விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், அடுத்த சில நாட்களுக்குள் மீண்டும் பேச்சு நடக்கும்,'' என, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


திட்டம்இதற்கிடையே, விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியதாவது:பிரதமர் மோடியோ அல்லது உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, நேரடியாக எங்களை அழைத்து பேச வேண்டும். வரும், 25 - 27 வரை, ஹரியானா மாநில நெடுஞ்சாலைகளில், சுங்க வரி வசூலிப்பதை தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும். வரும், 23ம் தேதியை, உழவர் நாளாக பின்பற்ற முடிவு செய்துள்ளோம். அன்று, யாரும் மதிய உணவு சமைக்க வேண்டாம் என, கோரிக்கை விடுத்துள்ளோம். இன்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுளோம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.


'அரசியல் இல்லை''விவசாயிகளை, சில அரசியல் கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன. அவற்றின் துாண்டுதலாலேயே போராட்டம் தொடர்கிறது' என, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சமீபத்தில் கூறியிருந்தனர்.இது குறித்து, அவர்களுக்கு, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:எங்கள் போராட்டங்களுக்குப் பிறகே, சில அரசியல் கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளன. அதனால், அரசியல் துாண்டுதலால், போராட்டம் நடப்பதாக கூறுவது தவறு.எங்களுடைய கோரிக்கைகள், போராட்டத்துக்குப் பின்னால், எந்த அரசியல் கட்சியும் இல்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அடுத்த இரண்டு நாட்களுக்குள், விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தஉள்ளார். இதன் வாயிலாக, விவசாயிகளின் போராட்டங்களுக்கு சுமுக தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

அமித் ஷா,

மத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-டிச-202000:14:41 IST Report Abuse
Rajagopal நல்லது செஞ்சாலும் சாவறானுக. செய்யாட்டாலும் சாவறானுக. இவனுகள என்னதான் செய்றது?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
21-டிச-202023:15:09 IST Report Abuse
bal உண்ணாவிரதம் வருவதற்கு முன்னாள் இவர்களுக்கு பணிகுளிர் இருக்கும் என்று தெரியாத...கூட்டத்தில் உள்ள அனைவரும் பஞ்சாபி காங்கிரஸ் குத்தகைக்காரர்கள்...விவசாயிகளுக்கு கடன் கொடுத்து அதனை விளைச்சலையும் கொள்ளை அடிக்கும் தரகர் கூட்டம்...
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-டிச-202017:35:38 IST Report Abuse
Endrum Indian 6 maadham poraduvadharkkaaka vandhirukkinrom enru சொல்லி தானே வந்தார்கள் அப்புற என்ன குளிர் வெயில் அதெல்லாம் பக்காவான ஏற்பாட்டுடன் வந்திருக்கின்றார்கள் அதான் பிஸ்ஸா மசாஜ் சப்பாத்தி தயாரிக்கும் மெஷின், ட்ராக்டர் ...... ........இப்போ லேட்டஸ்ட் ஐ டி டெபார்ட்மெண்டை கூட கொண்டு வந்திருக்காங்களாம். இவங்க பிளான் அடுத்த மே ஜூன் வரை இருப்பது என்று தான் ஆகவே கவலையில்லை என்ன இடை தரகர்களே சரி தானே நான் சொல்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X